சமூக ஏற்றத், தாழ்வை காட்டும் வீடீயோ... புதுச்சேரி மாலில் அவமானப்படுத்தப்பட்ட டெலிவரி மேன்! Description: சமூக ஏற்றத், தாழ்வை காட்டும் வீடீயோ... புதுச்சேரி மாலில் அவமானப்படுத்தப்பட்ட டெலிவரி மேன்!

சமூக ஏற்றத், தாழ்வை காட்டும் வீடீயோ... புதுச்சேரி மாலில் அவமானப்படுத்தப்பட்ட டெலிவரி மேன்!


சமூக ஏற்றத், தாழ்வை காட்டும் வீடீயோ... புதுச்சேரி மாலில் அவமானப்படுத்தப்பட்ட டெலிவரி மேன்!

புதுச்சேரியில் உணவு டெலிவரி செய்யும் ஊழியரை ஷாப்பிங் மாலில் அனுமதிக்காமல் கட்டாயப்படுத்தி வெளியில் அனுப்பிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

புதுச்சேரி அந்தோனியார் கோயில் அருகே உள்ள தனியார் வணிக வளாகத்தில் உணவு ஆர்டர் எடுப்பதற்காக சொமாட்டோ நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர் ஒருவர் சென்றார். அப்போது வணிக வளாக ஊழியர் ஒருவர், சொமாட்டோ ஊழியரை தடுத்தி நிறுத்தி, அவமதிப்பது போல் ஒரு வீடீயோ சமூகவளைதலங்களில் பரவி வருகிறது.

அந்த வீடியோவில் உள்ளே செல்லக் கூடாது என தடுத்தவரிடம், ஆர்டர் எடுக்க வந்தவர் தான் ஏன் உள்ளே செல்லக் கூடாது என கேள்வி எழுப்புகிறார். ஆனால் அவரை உன்னையெல்லாம் உள்ளே விட முடியாது என பிடிவாதம் பிடித்து அவரை கொச்சையாக நடத்துகிறார்கள். அவரோ தனக்கு நியாயம் கேட்டு போராடுகிறார். ஆனால் கடைசி வரை உள்ளே விடவில்லை.

சமூகத்தின் ஏற்றத், தாழ்வுகளை சொல்லும் இந்த வீடீயோ சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.


நண்பர்களுடன் பகிர :