இந்த திருநங்கைகளின் திறமையை பாருங்க... அதிசயத்து ஆச்சர்யத்தில் மூழ்கிப் போன நடுவர்கள் Description: இந்த திருநங்கைகளின் திறமையை பாருங்க... அதிசயத்து ஆச்சர்யத்தில் மூழ்கிப் போன நடுவர்கள்

இந்த திருநங்கைகளின் திறமையை பாருங்க... அதிசயத்து ஆச்சர்யத்தில் மூழ்கிப் போன நடுவர்கள்


இந்த திருநங்கைகளின் திறமையை பாருங்க... அதிசயத்து ஆச்சர்யத்தில் மூழ்கிப் போன நடுவர்கள்

திருநங்கைகள் என்றாலே கைதட்டி, காசு வாங்கிச் செல்பவர்கள் தான் நம் நினைவுக்கு வருவார்கள். காரணம் பேருந்து பயணத்திலும், ரயில் பயணத்திலும் நாம் அப்படியானவர்களையே அதிகம் சந்தித்து வருகிறோம்.

ஆனால் பல திருநங்கைகள் உழைத்து முன்னேறி உள்ளனர். பலர் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கிறார்கள். சிலர் தங்களின் அபாரத் திறமையால் முத்திரை பதித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படி கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஒரு பாடல் கேம் ஷோவின் மூலம் செம ரீச் ஆனவர்கள் தான் ஸ்டான்லி, மற்றும் ஷாக்சி.

இந்த கேம் ஷோ தொடங்கியது முதலே இருவரும் தங்களின் வசீகர குரலின் மூலம் அனைவரது உள்ளத்தையும் வெகுவாகக் கவர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில் அன்றைய நிகழ்ச்சியிலும் சிவகாசி படத்தில் இருந்து, ‘’கோடம்பாக்கம் ஏரியா...ஓட்டுக்கேட்டு வாரீயா?” பாடலை இந்த கூட்டணி பாடியது. இருவருமே ஆண், பெண் வாய்ஸில் செம ஸ்வீட்டாகப் பாட, ஒட்டுமொத்த அரங்கமே கைதட்டி மகிழ்ந்தது.

இதையெல்லாம் ஒருபடி மேலே போன நிகழ்ச்சியின் நடுவர்கள் இருவரையும், செம எனர்ஜிடிக்கா பாடுனீங்க. சான்ஸே இல்ல. பெண் குரலில் இருந்து, உடனே ஆண் குரலுக்கு போறதெல்லாம் ஆசம்!”என புகழ்ந்து தள்ளிவிட்டார்கள். இவர்களின் பாடல் திறனை நீங்களே பாருங்களேன். வீடீயோ இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


நண்பர்களுடன் பகிர :