நோ பால் சர்ச்சை: மிகுந்த வேதனையில் விராட் கோலி...! Description: நோ பால் சர்ச்சை: மிகுந்த வேதனையில் விராட் கோலி...!

நோ பால் சர்ச்சை: மிகுந்த வேதனையில் விராட் கோலி...!


 நோ பால் சர்ச்சை: மிகுந்த வேதனையில் விராட் கோலி...!

ஆர்.சி.பி vs எம்.ஐ ....எப்போதுமே இந்த இரண்டு டீம் மோதிக்கொள்ளும் போதெல்லாம் மேட்சில் ஒரு வித அனல் பறக்கும். எதிர்பார்ப்பும் சுழன்று அடிக்கும். அந்த வகையில் இந்த மேட்சிலும் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 187 ரன்களை அடித்திருந்தனர். இது உயர்ந்தபட்ச இலக்குத்தான்.

கேப்டன் ரோஹித் சர்மா பார்முக்கு வந்துவிட்டதால் இது நடந்தது. இதை எதிர்கொள்ள தொடர்ந்து ஆர்.சி.பி களத்துக்கு வந்தது. விராட் கோலி சூப்பர்பாக ஆடினார். இந்த மேட்சில் யுவராஜ்சிங் ஹாட்ரிக் சிக்ஸ் அடித்தார். இப்படியாக இந்த மேட்சில் கவனிக்க நிறைய விசயங்கள் இருந்தாலும், கடைசி பாலில் நடந்தது தான் இப்போது ஆர்.சி.பி ரசிகர்களின் ஹாட் டாபிக்!

மேட்சின் இறுதியில் கடைசி இரண்டு பந்துகளில் எட்டு ரன் அடிக்கணும்ன்னு ஒரு சூழ்நிலை வந்துச்சு. அதுல சிங்கிள் தான் அடித்தனர். இதனால் கடைசி பாலில் 7 ரன் அடிக்கணும்ன்னு நிலை ஏற்பட்டது. மலிங்கா அந்த பந்தை வீசினார். அந்த பந்திலும் சிங்கிளே அடிக்க, மும்பை வின் செய்துவிட்டதாக செலிபிரேசனை ஆரம்பித்து விட்டார்கள் ரசிகர்கள். ஆனால் அது நோ பால். கிரிக்கெட் ரூல்ஸ்படி, நோ பால் போட்டா, அடுத்த பால் இலவசமாக போட வேண்டும்.

மேட்ச் முடிந்த பின்னர் பிளே செய்து பார்க்கும் போது தான் அது நோ பால் எனத் தெரிந்தது. இதைப் பார்த்து விராட் கோலி ரொம்பவே டென்சன் ஆகிட்டாரு. மேட்ச் முடிந்து இது பற்றி பேசியவர், ‘’ஐ.பி.எல் லெவல் மேட்சில் இந்த மாதிரி மிஸ்டேக் எல்லாம் நடக்கவே கூடாது. அம்பயர் வந்து கொஞ்சம் கண்ணைத் திறந்து பார்த்துருக்கணும். இந்த மாதிரி சின்ன, சின்ன மார்ஜின்ஸ்னால், மேட்சே மாறிப் போயிடும்.

இந்த மிஸ்டேக்லாம் ஏத்துக்கவே முடியாத விசயம். இதனால நான் ரொம்ப மனம் உடைஞ்சு இருக்கேன்.”ன்னு சொல்லிருக்காரு. இத்தனை கேமராக்கள், மூன்றாவது அம்பயரெல்லாம் இருந்தும் இந்த தவறு நடக்கலாமா? என பொங்கிக் கொண்டிருக்கிறார்கள் விராட் கோலி ரசிகர்கள்!


நண்பர்களுடன் பகிர :