கற்பித்த ஆசிரியையை இப்படியும் கூட கொளரவிக்கலாம்... உயரப் பறக்கும் ஒரு மாணவனின் செயலைப் பாருங்க...! Description: கற்பித்த ஆசிரியையை இப்படியும் கூட கொளரவிக்கலாம்... உயரப் பறக்கும் ஒரு மாணவனின் செயலைப் பாருங்க...!

கற்பித்த ஆசிரியையை இப்படியும் கூட கொளரவிக்கலாம்... உயரப் பறக்கும் ஒரு மாணவனின் செயலைப் பாருங்க...!


கற்பித்த ஆசிரியையை இப்படியும் கூட கொளரவிக்கலாம்... உயரப் பறக்கும் ஒரு மாணவனின் செயலைப் பாருங்க...!

மாதா, பிதா, குரு, தெய்வம் என்பது நம் முன்னோர்கள் வாக்கு. தெய்வத்துக்கும் முன்னர் அதனால் தான் கற்றுக்கொடுத்த ஆசிரியர்களை வைத்துள்ளனர். அப்படிப்பட்ட ஆசிரியர் ஒருவருக்கு,அவரிடம் கல்வி பயின்ற மாணவர் செய்த நன்றிக்கடன் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டில்லியை சேர்ந்த ரோகன் பாசினுக்கு 33 வயது ஆகிறது. இவர் விமானியாக உள்ளார். இவர் மூன்று வயதில் டெல்லியில் உள்ள ஆசிரியை சுதா சத்யன் என்பவரிடம் ஆரம்ப கல்வி படித்துள்ளார்.

அந்த பிஞ்சுப் பருவத்தில் அவருக்குள் கல்வியின் முக்கியத்துவத்தையும், அதன் தேவையையும் உணர்த்திய தன் ஆசிரியையை கொளரவிக்க அவர் முடிவு செய்தார். இதற்காக டில்லியில் இருந்து அமெரிக்காவின் சிகாகோ நகருக்கு விமானத்தில் ஆசிரியையை அழைத்துச் சென்றார்.

ஆசிரியையை சக பயணிகளுடன் விமானி உடையில் கம்பீரமாக வந்தும் அறிமுகம் செய்து வைத்தார். எனது இன்றைய உயரத்துக்கு இவரே அடித்தளம் இட்டவர் என தன் ஆசிரியை குறித்து பயணிகளுக்கு அறிமுகம் செய்து வைக்க அவர்கள் உற்சாகமாக கைதட்டினார்கள். இதனைக் கண்டு உணர்ந்த ஆசிரியை சுதா சத்யனுக்கோ கண்களில் ஆனந்த கண்ணீர் ஊற்றெடுத்தது.

விமானியின் தாயார் இதை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் தான் சுவாரஸ்யமே அடங்கியுள்ளது. அதில் மூன்று வயதில் ரோகன் பாடசாலையில் ஆசிரியையுடன் இருக்கும் படம், இப்போது விமானியாக ஆசிரியையுடன் இருக்கும் படம் என இரண்டையும் வெளியிட்டுள்ளார். இது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


நண்பர்களுடன் பகிர :