பேட்டிங் செய்த தோனி: ஊக்கப்படுத்தி குரல் எழுப்பிய செல்லமகள்... ஒரு செம ஸ்வீட் வீடீயோ...! Description: பேட்டிங் செய்த தோனி: ஊக்கப்படுத்தி குரல் எழுப்பிய செல்லமகள்... ஒரு செம ஸ்வீட் வீடீயோ...!

பேட்டிங் செய்த தோனி: ஊக்கப்படுத்தி குரல் எழுப்பிய செல்லமகள்... ஒரு செம ஸ்வீட் வீடீயோ...!


பேட்டிங் செய்த தோனி: ஊக்கப்படுத்தி குரல் எழுப்பிய செல்லமகள்...   ஒரு செம ஸ்வீட் வீடீயோ...!

ஜ.பி.எல் போட்டியில் தோனி பேட்டிங் செய்ய அவரை உற்சாகப்படுத்தி அவரது செல்ல மகள் குரல் எழுப்பிய வீடீயோ சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.

டெல்லியில் உள்ள பெரோசா கோட்லா மைதானத்தில் நேற்று ஐ.பி.எல் போட்டி நடந்தது. இதில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. அந்த ச்ணி 6 விக்கெட் இழப்புக்கு 147 ரன்களை 20 ஓவரில் எடுத்திருந்தது. இதில் தொடக்க ஆட்டக்காரர் அம்பஹி நாயுடு வெறும் 5 ரன் மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ஷேன் வாட்சன் 44 ரன் எடுத்தார். இந்த மேட்சில் கேதார் ஜாதவ் மற்றும் கேப்டன் தோனி கூட்டணி நிதானமாக ஆடி ரன்களை குவித்தனர். முடிவில் 19.4வது ஓவரில், நான்கு விக்கெட்களை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

முன்னதாக சென்னையில் நடந்த ஐ.பி.எல் போட்டியில் தோனி ஆடவில்லை. இதனால் இந்த ஐ.பி.எலில் இதுதான் தோனியின் முதல் பேட்டிங். தோனி மைதானத்தில் ஆட்டத்துக்கு வந்ததுமே அவரது ரசிகர்கள் கைதட்டி ஆர்ப்பரித்தனர். சிலர் உற்சாகமாக குரல் எழுப்பினர். ஆரவாரம் செய்தனர்.

அப்போது ஒரு சின்னச் சிறு குழந்தையும் கத்திக் கொண்டிருந்தது. அது அப்பா...அப்பா என ஹிந்தியில் கத்தியது. அது தல தோனியின் செல்ல மகள் ஸிவா தான். ரசிகர்களோடு, ரசிகர்களாக அந்த செல்ல மகளும் உற்சாகமாகக் கத்த, அது இப்போது சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.


நண்பர்களுடன் பகிர :