திரைப்படங்களில் மட்டுமல்ல...நிஜத்திலும் வில்லனா நாசர்? சொந்த தம்பியே வெளியிட்ட அதிர்ச்சி வீடீயோ Description: திரைப்படங்களில் மட்டுமல்ல...நிஜத்திலும் வில்லனா நாசர்? சொந்த தம்பியே வெளியிட்ட அதிர்ச்சி வீடீயோ

திரைப்படங்களில் மட்டுமல்ல...நிஜத்திலும் வில்லனா நாசர்? சொந்த தம்பியே வெளியிட்ட அதிர்ச்சி வீடீயோ


திரைப்படங்களில் மட்டுமல்ல...நிஜத்திலும் வில்லனா நாசர்?  சொந்த தம்பியே வெளியிட்ட அதிர்ச்சி வீடீயோ

நடிகர் நாசர் தேர்ந்த கலைஞர். கூத்துப்பட்டறைகளில் பயிற்சி பெற்ற நாசர் மிகச்சிறந்த மனிதர் என பொதுவெளியில் பெயர் எடுத்தவர். நல்ல நடிகர், பண்பாளர், உதவும் குணம் கொண்டவர், நடிகர் சங்கத் தலைவர் என பன்முகம் கொண்ட நாசர் வில்லன் கதாபாத்திரங்களில் கலக்கியவர். இப்போது அவர் நிஜத்திலும் வில்லன் தான் என்பது போல் ஒரு வீடீயோவை வெளியிட்டுள்ளார் அவரது சொந்தத் தம்பி ஜவஹர்.

அவர் வெளியிட்டுள்ள வீடீயோவின் சாரம்சம் இதுதான். நாசர் வசதியான நிலையிலும் தன் தாய், தந்தையரை கவனிக்கவில்லை. கடந்த 25 ஆண்டுகளில் அவர்களிடம் பேரன்களையே இரண்டு, மூன்று முறை தான் காட்டி இருப்பார். அவரது பெற்றோர்கள் மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு பையனையும் வைத்துக்கொண்டு கஷ்டப்படுகின்றனர்.

நான் அவரது தம்பி என்னும் முறையில் நடிகர் சங்கத்துக்கு புகார் கொடுக்கப் போயிருந்தேன். ஆனால் அவர்கள் அவரை நல்லவர் என அனுப்பி வைத்துவிட்டனர். பொதுவாக நாசர் மேடையில் மற்றவர்களை எப்படி பார்க்க வேண்டும்? மதிக்க வேண்டும் என இலக்கிய நடையோடு பேசுவார். ஆனால் அவர் நிஜத்தில் பெற்றோரையே பராமரிக்காதவர். இதில் அவரது மனைவி தென் சென்னை தொகுதியில் கமல் கட்சி சார்பில் நிற்கிறார். இதையெல்லாம் யோசித்து ஓட்டுப் போடுங்கள்..”என்னும் தொனியில் அவர் பேசி இருக்கிறார்.

வீடீயோவைப் பாருங்களேன். உங்களுக்கேத் தெரியும்...


நண்பர்களுடன் பகிர :