இணையத்தில் வைரலாகும் அஸ்வின் ரன்-அவுட் வீடியோ. Description: இணையத்தில் வைரலாகும் அஸ்வின் ரன்-அவுட் வீடியோ.

இணையத்தில் வைரலாகும் அஸ்வின் ரன்-அவுட் வீடியோ.


இணையத்தில் வைரலாகும் அஸ்வின் ரன்-அவுட் வீடியோ.

ஐபிஎல் 12வது சீசன் கடந்த 23ம் தேதி தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. நேற்றைய போட்டியில் ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மற்றும் அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் ஜெய்பூரில் பலப்பரிட்சை நடைபெற்றது. மிகுந்த பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் கிங்க்ஸ் லெவன் பஞ்சாப் அணி 14 ரன்களில் வெற்றியை ருசித்தது.

டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது ராஜஸ்தான் அணி. முதலில் களம் இறங்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 184 ரன்களை குவித்தது. கிறிஸ் கெயில் அதிகபட்சமாக 79 ரன்களை எடுத்தார்.

இதனைத்தொடர்ந்து களமிறங்கிய ராஜஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். அந்த அணியின் வீரர் பட்லர் சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்தார். பஞ்சாப் வீரர்களின் பந்துவீச்சை அடித்து நொறுக்கினார் பட்லர். ராஜஸ்தான் அணி சுலபமாக வெற்றி பெற்றுவிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பட்லர், அஸ்வினால் ரன் அவுட் ஆகினார். ஆனால் அவர் ரன் அவுட் செய்யப்பட்ட விதம் தற்போது ரசிகர்களிடையே பெரும் விமர்சனப் பொருளாக உருவெடுத்துள்ளது.

13-வது ஓவரை அஸ்வின் வீசியபோது பேட்ஸ் மேனுக்கு எதிர் திசையில் நின்றிருந்தார் பட்லர். அஸ்வின் பந்துவீசுவதற்கு முன்பே கிரீசை விட்டு சற்று வெளியே சென்றதால் அஸ்வின், அவரை ரன்-அவுட் செய்தார்.இது ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. அஸ்வினின் இந்த செயல் குறித்து சமூக வலைதளத்தில் இருவேறு கருத்துகள் பதிவிட்டு வருகின்றனர். சிலர் அஸ்வின் செய்தது சரி என்றும், சிலர் ஸ்ட்ரீட் கிரிக்கெட்டர் விளையாடுவதுபோல் அஸ்வின் விளையாடியுள்ளார் என்றும் கருத்துகள் பதிவிட்டு வருகின்றனர். அஸ்வின் ரன் அவுட் செய்த அந்த வீடியோவும் இணையத்தில் வைரலாக பரவிவருகின்றது.


நண்பர்களுடன் பகிர :