பரிசை கொடுக்காத பிரபல தொலைக்காட்சி... வேதனை, விரக்தியில் தவிக்கும் ராக்ஸ்டார் ரமணியம்மாள்..! Description: பரிசை கொடுக்காத பிரபல தொலைக்காட்சி... வேதனை, விரக்தியில் தவிக்கும் ராக்ஸ்டார் ரமணியம்மாள்..!

பரிசை கொடுக்காத பிரபல தொலைக்காட்சி... வேதனை, விரக்தியில் தவிக்கும் ராக்ஸ்டார் ரமணியம்மாள்..!


பரிசை கொடுக்காத பிரபல தொலைக்காட்சி... வேதனை, விரக்தியில் தவிக்கும் ராக்ஸ்டார் ரமணியம்மாள்..!

தமிழ் உள்பட பல மொழிகளிலும் ஒளிபரப்பாகும் சேட்டிலைட் சேனல் ஜீ. இதில் ஜீ தமிழில் சரிகமப என்னும் நிகழ்ச்சி கடந்த ஆண்டு நடந்தது. இதில் வர்ஷா என்ற பெண்மனிக்கு முதல் பரிசும், சென்னையில் வீட்டு வேலை செய்து வாழ்ந்து வரும் ரமணியம்மாள் என்ற 63 வயது பெண்ணுக்கு இரண்டாம் இடமும் கிடைத்தது.

இந்த நிகழ்ச்சியில் ரமணியம்மாள் தான் ஹிட். அவராலேயே இந்த ஷோ நன்றாகப் போய், டி.ஆர்.பியிலும் நல்ல ரேட்டிங் வாங்கியது. இவருக்கு இரண்டாம் பரிசுக்கு 5 லட்ச ரூபாயும், 5 செண்ட் இடமும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ரமணியம்மாள், ‘’அஞ்சு லட்ச ரூபாயில் ஒரு லட்ச ரூபாயை ஒரு தனியார் நிறுவனம் கொடுக்கும்ன்னு சொன்னாங்க. ஆனா அவுங்க பணமா கொடுக்க மாட்டோம். வெளிநாடு போறதா இருந்தா சொல்லுங்க விமான டிக்கெட் போட்டு தர்றோம்ன்னு சொன்னாங்க. மிச்சம் இருந்த 4 லட்சத்தில் வரிபோக 2,80,000 கிடைச்சுது. எனக்கு மொத்தம் 7 பிள்ளைகள். ஒவ்வொருத்தருக்கும் தலா 40 ஆயிரம்ன்னு பிரிச்சு கொடுத்துட்டேன்.

இடத்தைக் கேட்டேன். திண்டிவனத்தில் இருக்கும்ன்னு, அங்க விவசாயம் தான் செய்யணும்ன்னும் சொன்னாங்க. ஆனா இதுவரை தரல. அந்த நிலத்தோட மதிப்புல பாதி பணத்தை தந்தா கூட போதும்ன்னு சொல்லி இருக்காங்க...


நண்பர்களுடன் பகிர :