தண்ணீர் இன்றி மயங்கி விழுந்த மரங்கொத்தி... பரிதவித்த இளைஞன்..! Description: தண்ணீர் இன்றி மயங்கி விழுந்த மரங்கொத்தி... பரிதவித்த இளைஞன்..!

தண்ணீர் இன்றி மயங்கி விழுந்த மரங்கொத்தி... பரிதவித்த இளைஞன்..!


தண்ணீர் இன்றி மயங்கி விழுந்த மரங்கொத்தி... பரிதவித்த இளைஞன்..!

நீர் இன்றி அமையாது உலகு என்றார் வள்ளுவர். நீர் இல்லை என்றால் உயிர் வாழ்தலே இல்லை என்று சொல்லலாம்.

மனிதர்கள் ஆவது தங்களுக்கு வீட்டில் தண்ணீர் கிடைக்காவிட்டால் பாட்டில் நீரை வாங்கிப் பருகி விடலாம். ஆனால் பறவைகளின் நிலையை நினைத்து பாருங்கள்.

அவைகளுக்கு வாழ்வாதாரமே போய் விடும் தண்ணீர் தேடித்தான் அவை இடம் பெயர்ந்து கொண்டே இருக்கும். இப்படியான சூழலில் இளைஞர் ஒருவரின் விழிப்புணர்வு பதிவு ஒன்று சமூக வலைதளங்கள் அத்தனையிலும் வேகமாக பரவி வருகிறது.

அந்த இளைஞர் தனது நிலக்கடலை தோட்டத்துக்கு சென்று உள்ளார். அங்கு தண்ணீர் தாகத்தோடு மரங்கொத்தி பறவை ஒன்று கிடந்தது. பொதுவாக மனிதர்கள் நடமாட்டத்தை பார்த்ததும் அச்சப்பட்டு பறவைகள் பறந்து விடும். ஆனால் அது பறக்க வில்லை. காரணம் அதன் உடலில் தண்ணீர் இல்லாமல் நீர் இழப்பு ஏற்பட்டு மயங்கிக் கிடந்தது.

இதை பார்த்த அந்த இளைஞர் அந்த மரங்கொத்தி பறவைக்கு தண்ணீர் கொடுத்து மீட்டு உள்ளார். மேலும் அவர் முன்பெல்லாம் வாய்க்கால் வழியாகவே தோட்டங்கலுக்கு தண்ணீர் வரும். இப்போதெல்லாம் குழாய்களுக்கு மாறி விட்டதால் தான் இந்த நிலை ஏற்பட்டு விட்டதென வேதனையுடன் தெரிவித்து உள்ளார். அது இப்போது வைரலாகி வருகிறது. மேலும் கோடைக்காலத்தில் பறவைகளுக்கு உதவும் வகையில் வீட்டு மாடியில் தண்ணீர் வைக்கவும் அந்த இளைஞர் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.


நண்பர்களுடன் பகிர :