சொதப்பிய பெங்களூர் அணி:..கழுவி ஊற்றிய கிரிக்கெட் ரசிகர்கள்... சும்மா வைச்சு செஞ்ச பரிதாபம்..! Description: சொதப்பிய பெங்களூர் அணி:..கழுவி ஊற்றிய கிரிக்கெட் ரசிகர்கள்... சும்மா வைச்சு செஞ்ச பரிதாபம்..!

சொதப்பிய பெங்களூர் அணி:..கழுவி ஊற்றிய கிரிக்கெட் ரசிகர்கள்... சும்மா வைச்சு செஞ்ச பரிதாபம்..!


சொதப்பிய பெங்களூர் அணி:..கழுவி ஊற்றிய கிரிக்கெட் ரசிகர்கள்... சும்மா வைச்சு செஞ்ச பரிதாபம்..!

சென்னை சூப்பர் கிங்ஸ்க்கும், பெங்களூரு அணிக்கும் நடந்த கிரிக்கெட் மேட்சில் பெங்களூர் அணி படுகேவலமாக ஆடி வெறும் 70 ரன்னில் சுருண்டது. தொடர்ந்து பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் போராடியே ஜெயித்தது. அதிலும் தோனி பேட் செய்யவே இல்லை.

இதனால் மிகுந்த எதிர்பார்ப்பில் ஆட்டத்தைக் காண வந்த ரசிகர்கள் சுருத்து குறைந்தனர். அவர்களிடம் இதுகுறித்து கேட்டவர்களிடம் அவர்கள் கோபம், ஏக்கம் என கலவையான மனநிலையை வெளிப்படுத்தினர். அதில் இருந்து சிலவற்றைத் தெரிந்துகொள்ள மேலே படியுங்கள்...

ரசிகர்களின் ரியாக்சன்களில் சில...

ஜெர்சியை கழட்டிடலாம்ன்னா இந்திய நாடு என் நாடு. இந்தியா பேன்.

நெஸ்ட் மேட்ச் ஆச்சும் த்ரில்லிங்கா இருக்கும்ன்னு நினைக்குறோம். டிக்கெட் கிடைக்காம ஆர்வத்தில் சுத்திட்டு இருக்கும் போது என் பிரண்ட் தெய்வம் மாதிரி வந்து டிக்கெட் இருக்கு மச்சான்..வேணுமான்னான். குடு தெய்வமேன்னு வாங்கிட்டு வந்து பார்த்தேன். மேட்ச் செமையா இருந்தது. என்ன சொல்லுறது...? புது பீல்...அனா மேட்ச் ஒன் சைடு கேம் ஆகிடுச்சு.

மகா மட்டமான ஸ்கோர். இந்த மட்டமான ஸ்கோருக்கு 1500 ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்குனது கொஞ்சம் கேவலம் தான். இதுக்கு வீட்லயே உட்கார்ந்து பார்த்திருப்போம்.

போர் அடிப்பார்ன்னு பார்த்தா, டொக், டொக்கா வைச்சுட்டு இருக்காங்கண்ணா...

முதல் மேட்ச் பயங்கரமா இருக்கும்ன்னு எதிர்பார்த்து வந்தோம். பிட்ச் ரெடி பண்ணது யாருன்னு தெரியல. அந்த தெய்வத்தை பார்க்கணும். புல்லா பவுலிங் பிட்சை ரெடி பண்ணி வைச்சுருக்காங்க. ஐ.பி.எல் கேம்ன்னாலே பேட்ஸ் மேன் கேம் தான்.

தோனிக்காகத்தான் வந்தோம் அவரு தலையே காட்டல.

டப் பைட் இல்ல. 70 ரன்ல முடிச்சுருக்காங்க. மேட்ச் இன்னும் இன்ரஸ்டிங்கா இருந்திருக்கலம். சென்னை முதல்ல ஆடுனா நல்லா இருந்துருக்கும். எனத் தொடங்கி ரசிகர்கள் பலரும் கிழித்து தொங்கவிட்டுள்ளனர்.


நண்பர்களுடன் பகிர :