ரசிகர்களைப் பார்க்க தடுப்புசுவர் ஏறி குதித்து சென்ற தோனி..! Description: ரசிகர்களைப் பார்க்க தடுப்புசுவர் ஏறி குதித்து சென்ற தோனி..!

ரசிகர்களைப் பார்க்க தடுப்புசுவர் ஏறி குதித்து சென்ற தோனி..!


ரசிகர்களைப் பார்க்க தடுப்புசுவர் ஏறி குதித்து சென்ற தோனி..!

இந்திய கிரிக்கெட் உலகின் கதாநாயகன் என்றே தோனியை சொல்லலாம். மனிதருக்கு அந்த அளவுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உண்டு. இந்தியாவையும் தாண்டி உலக அளவில் கிரிக்கெட் ப்ரியர்களின் ரசனைக்கு உரியவராக தோனி இருக்கிறார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு தோனி மைதானத்தில் பயிற்சியில் இருந்த போது ரசிகர் ஒருவர் அவரைப் பார்த்து கைகொடுக்கும் ஆசையில் மைதானத்துக்கு உள்ளே குதித்தார். அப்போது தோனி அவருடன் ஒரு குழந்தையை போல ஓடி ஒளிந்து விளையாடினார். மைதானக் காவலர்கள் வந்து அந்த ரசிகரை பிடித்ததும் தோனியே போய் அந்த ரசிகருக்கு கைகொடுத்து கட்டித் தழுவினார்.

அதன் பின்னர் மீண்டும் ஒருமுறை இதேபோல் ஒரு சம்பவம் நடந்தது. இதேபோல் இப்போது ஒரு சம்பவம் நடந்துள்ளது. மைதானத்தின் தடுப்பு சுவர்களை தாண்டி குதித்து வருகிறார் தோனி. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அங்கு இருக்கும் கிரிக்கெட் பிரியர்கள் தோனி...தோனி...தோனி என உற்சாகமாக குரல் எழுப்புகின்றனர்.

தோனி அங்கிள்..தோனி அங்கிள் என குழந்தைகள் சூழ்ந்து கொள்ள அவர்களுக்கு ஆட்டோகிராப் போடுகிறார் தோனி. குழந்தைகள் குதூகலத்தில் மூழ்கிப் போகின்றனர். இதனை சென்னை சூப்பர் கிங்ஸ் சமூகவளைதளங்களில் பதிவிட அது வைரலாகி வருகிறது.


நண்பர்களுடன் பகிர :