ஆண்களுக்கு மாதம் 10 லிட்டர் சாராயம்...ஒரு வேட்பாளரின் வாக்குறுதி! Description: ஆண்களுக்கு மாதம் 10 லிட்டர் சாராயம்...ஒரு வேட்பாளரின் வாக்குறுதி!

ஆண்களுக்கு மாதம் 10 லிட்டர் சாராயம்...ஒரு வேட்பாளரின் வாக்குறுதி!


ஆண்களுக்கு மாதம் 10 லிட்டர் சாராயம்...ஒரு வேட்பாளரின் வாக்குறுதி!

நாடாளுமன்ற தேர்தல் தமிழகத்திலும் களை கட்டி உள்ளது. வேட்பாளர்கள் விருப்ப மனு தாக்கல் செய்து வருகின்றனர். அந்த வகையில் சுயேட்சை வேட்பாளர் ஒருவர் கொடுத்த வாக்குறுதி அதிரவைத்து உள்ளது.

ஈரோடு மாவட்டம் அந்தியூரை சேர்ந்த ஷேக் தாவூதுக்கு 53 வயது ஆகிறது. இவர் நேற்று திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து, திருப்பூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்தார்ம் சுயேட்சையாக களம் இறங்கும் இவர் தொடர்ந்து செய்தியாளர் களுக்கு பேட்டி கொடுத்தார்.

அப்போது அவர் முதிர்த்த முத்துகள் தான் இவை..." என்னை ஜெயிக்க வைத்தால் என் தொகுதியில் இருக்கும் அனைத்து பெண்களுக்கும் அரசிடம் இருந்து 25 ஆயிரம் உதவித் தொகை வாங்கிக் கொடுப்பேன். ஒவ்வொரு குடும்பத்தில் உள்ள ஆணுக்கும் சுத்தமான 10 லிட்டர் பிராந்தி பாண்டிச்சேரியில் இருந்து வழங்க ஏற்பாடு செய்வேன்.

அனைத்து மதத்தை சேர்ந்த பெண்களுக்கும் திருமணத்துக்கு பத்து லட்சம், பத்து பவுனை அரசிடம் இருந்து வாங்கிக் கொடுப்பேன் என்பது உள்பட தனது 14 வாக்குறுதிகளை சொல்லிவிட்டு கடைசியாக ஒன்றை சொன்னாரே பார்க்கலாம்...

மதுவிலக்கை அமல்படுத்தக் கூடாது என டெல்லியில் போய் போராடுவாராம். அடேங்கப்பா...அப்படிப்போடு என்று சொல்லி கிளம்பினர் பேட்டி எடுத்த நிருபர்கள்


நண்பர்களுடன் பகிர :