மோடியை மையமாக வைத்து இளைஞர் கேட்ட ஒரு கேள்வி.. வட இந்தியா முழுவதும் வைரலாகும் வீடீயோ Description: மோடியை மையமாக வைத்து இளைஞர் கேட்ட ஒரு கேள்வி.. வட இந்தியா முழுவதும் வைரலாகும் வீடீயோ

மோடியை மையமாக வைத்து இளைஞர் கேட்ட ஒரு கேள்வி.. வட இந்தியா முழுவதும் வைரலாகும் வீடீயோ


மோடியை மையமாக வைத்து இளைஞர் கேட்ட ஒரு கேள்வி..   வட இந்தியா முழுவதும் வைரலாகும் வீடீயோ

பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக தொலைக்காட்சியில் இளைஞர் ஒருவர் பேசும் வீடீயோ சமூகவலைதளங்களில் செம வைரல் ஆகி வருகிறது.

பாஜக இந்த தேர்தலை மிகவும் வித்யாசமான முறையில் சந்திக்கிறது. டிவிட்டர் அக்கவுண்ட்களில் தங்கள் பெயருக்கு முன்னாள் காவலர் அதாவது chowkidar என்ற வார்த்தையை சேர்த்துக் கொள்கின்றனர். பிரதமர் நரேந்திர மோடியும் அதைச் செய்துள்ளார். அதாவது இவர்கள் நாட்டின் காவலர்கள் என்னும் அர்த்தத்தில் தான் இப்படி பெயருக்கு முன்னர் சேர்க்கின்றனர். இது குறித்து இளைஞர் ஒருவரின் கமெண்ட் தான் இன்றைய விவாதப் பொருள் ஆகியுள்ளது.

இந்தி தொலைக்காட்சி ஒன்றில் நம்மூரு நீயா? நானா? பாணியில் நடந்த நிகழ்ச்சி அது. அதில் பாஜகவின் சில தலைவர்களும் கலந்து கொண்டனர். அதில் பேசிய இளைஞர் இந்தியில் கேள்விக்கணைகளைத் தொடுத்தார். அதன் தமிழாக்கம் இது தான். ‘’பிரதமர் எங்களை பக்கோடா விற்கச் சொல்லுகிறார். அவரே அவரை காவலர் என சொல்லிக் கொள்கிறார். எங்களுக்கு காவலன் தான் வேண்டுமென்றால் நாங்கள் நேபாளத்தில் இருந்து கூர்காவை வரவைத்துக் கொள்வோம். அங்கு ஏராளம் கூர்காக்கள் இருக்கிறார்கள்.

எங்கள் தேவையெல்லாம் பிரதமர் தான். முன்னாள் ஆட்சி செய்தவர்கள் நாட்டை சீரழித்துவிட்டதாக மோடி கூறுகிறார். ஆனால் அவர் பிறப்பதற்கு முன்பே பாபா அணு ஆராய்ச்சி மையம் உள்ளது. மோடி வீட்டில் கோலி விளையாடும் போது பக்ரா நங்கல் அணை முன்னாள் ஆட்சியாளர்களால் கட்டப்பட்டது என்பதை அவர் மறக்கக் கூடாது.”என பேசி திணற வைத்தார். இந்த வீடீயோ தான் இப்போது வட இந்தியாவின் வைரல் டாபிக்...


நண்பர்களுடன் பகிர :