வைரலாகும் சி.எஸ்.கே கேம்... மீண்டும் ரசிகரை ஓட விட்டு விளையாடிய தோனி..! Description: வைரலாகும் சி.எஸ்.கே கேம்... மீண்டும் ரசிகரை ஓட விட்டு விளையாடிய தோனி..!

வைரலாகும் சி.எஸ்.கே கேம்... மீண்டும் ரசிகரை ஓட விட்டு விளையாடிய தோனி..!


வைரலாகும் சி.எஸ்.கே கேம்...   மீண்டும் ரசிகரை ஓட விட்டு விளையாடிய தோனி..!

தோனியை கிரிக்கெட் தல என்று சொல்லலாம். அவருக்குள் எப்போதும் குறும்பும், குழந்தைத்தனமும் கூடவே பயணிக்கும். அண்மையில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கிரிக்கெட் தொடரின் போது ரசிகர் ஒருவர் மைதானத்தில் தோனியை நோக்கி ஓடி வந்தார்.

அவரிடம் சிக்காமல் குறுக்கும், நெடுக்குமாக சக வீரர்களுக்கு இடையே புகுந்து, கடைசியில் அந்த ரசிகரை கட்டிப்பிடித்து தோனி விடைகொடுக்கும் வீடீயோ சமூகவளைதலங்களில் வைரல் ஆனது. அதில் கிரிக்கெட்டில் ஜொலிக்கும் தோனியின் தன்னடக்கம், ரசிகர்களை மதிக்கும் பண்பைக் காண முடிந்தது.

அதேபோன்று ஒரு சம்பவம் மீண்டும் நிகழ்ந்துள்ளது. விரைவில் நடக்க இருக்கும் ஐபிஎல் தொடரை ஒட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர், எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போதும் ரசிகர் ஒருவர் மைதானத்தில் இருந்த தோனியை நோக்கி ஓடி வந்தார். அப்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பவுலிங் பயிற்சியாளர் பாலாஜி தோனியின் அருகில் நின்று கொண்டிருந்தார். ரசிகர் ஓடி வருவதைப் பார்த்த தோனி பாலாஜியை சுற்றி ஓட, ரசிகரும் விடாமல் துரத்தி உள்ளார். தோனி உடனே இன்னொரு திசையில் ஓட ரசிகரும் அவர் பின்னால் ஓடினார்.

இப்படியாக நடந்து கொண்டிருக்கும் போதே மைதானத்தின் காவலர்கள் ஓடி வந்து, ரசிகரை பிடித்துக் கொண்டனர். அப்போது அந்த ரசிகரிடம் வந்து தோனி கைகொடுக்க, ரசிகரோ ஒரேயொரு முத்தம் கேட்க, தோனியோ சிரித்துக்கொண்டே விடைபெற்றார். இதனை இப்போது சி.எஸ்.கே அணியின் தீம் சாங் இசையில் வீடீயோவாக அதிகாரப் பூர்வ டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து உள்ளனர்.


நண்பர்களுடன் பகிர :