தர்பூசணி பழத்தில் இத்தனை நன்மைகளா? இந்த கோடையில் தர்பூசணி பழம் சாப்பிட மறக்காதீங்க...! Description: தர்பூசணி பழத்தில் இத்தனை நன்மைகளா? இந்த கோடையில் தர்பூசணி பழம் சாப்பிட மறக்காதீங்க...!

தர்பூசணி பழத்தில் இத்தனை நன்மைகளா? இந்த கோடையில் தர்பூசணி பழம் சாப்பிட மறக்காதீங்க...!


தர்பூசணி பழத்தில் இத்தனை நன்மைகளா? இந்த கோடையில் தர்பூசணி பழம் சாப்பிட மறக்காதீங்க...!

இது கோடைக்காலம். உச்சி வெயில் மண்டையைப் பிளக்கிறது. இதனால் இந்த கோடையில் உடலின் நீர் வியர்வையாக வெளியேறும். இதனால் ரத்தத்தில் நீர்ச்சத்து குறைந்து ரத்த ஓட்டத்தின் வேகமும் குறையும்.

இப்படியான சமயங்களில் தர்பூசணி பழம் மிகச்சிறந்த அருமருந்து. கோடையில் நீர்சத்து நிறைந்த தர்பூசணி சாப்பிடுவதால் சிறுநீரகங்கள் சிறப்பாக செயலாற்றும். கூடவே நம் சிறுநீர் பைகளில் சிறுநீரக அடைப்பு, நீர் சுருக்கு போன்ற நோய்கள் ஏற்படுவதையும் இது தடுக்கும். மேலும் நம் சிறுநீரிலேயே உடலின் அனைத்து நச்சுக்களையும் இது வெளியேறச் செய்யும்.

உடலுக்கு குளிர்ச்சி தருவதோடு, உடல் சோர்வையும் நீக்குகிறது. தர்ப்பூசணி பழங்களில் நார்ச்சத்தும், நீர் சத்தும் அதிக அளவில் உள்ளதால் மலச்சிக்கல் பிரச்னையை தீர்க்கும். உடல் இயக்கத்துக்குத் தேவையான தாதுக்கள், இரும்பு சத்து, வைட்டமின் சத்து, சுண்ணாம்பு சத்து, பாஸ்பரஸ், கால்சியம் ஆகியவை தர்பூசணியில் அதிக அளவில் உள்ளது.

சிட்ருலின் என்னும் சத்து தர்பூசணியின் வெண்மை நிறப் பகுதியில் அதிகம் உள்ளது. இதை பழத்தோடு சேர்த்து சாப்பிடுவதால் ஆண்மை குறைபாட்டை போக்க முடியும்.

நார்சத்து தர்பூசணியில் அதிகம் இருப்பதால் ரத்த அழுத்தத்தையும் குறைக்கும். இதனால் இதய பாதிப்புகள் வராமலும் தடுக்கிறது. உடல் எடை குறைப்புக்கும் தர்பூசணி உதவும். தர்பூசணியில் இத்தனை பலன்கள் கொட்டிக் கிடந்தாலும் சந்தைக்கு வரும் தர்பூசணி பலதும் ரசாயணம் கொட்டி விளைவிக்கப்பட்டதாகவுன், ஊசி போட்டு பழுக்க வைக்கப்பட்டதாகவும் இருப்பது வேதனை. அதனால் நேர்மையான வியாபாரியாக தேர்ந்தெடுத்து வாங்குங்கள். அல்லது உங்கள் பகுதியில் உள்ள இயற்கை அங்காடிகளுக்கு போய் வாங்குங்கள்...!


நண்பர்களுடன் பகிர :