பாடல் பாடிய இளையராஜா... தேம்பி அழுத கல்லூரி மாணவி... வைரலாகும் வீடீயோ... Description: பாடல் பாடிய இளையராஜா... தேம்பி அழுத கல்லூரி மாணவி... வைரலாகும் வீடீயோ...

பாடல் பாடிய இளையராஜா... தேம்பி அழுத கல்லூரி மாணவி... வைரலாகும் வீடீயோ...


பாடல் பாடிய இளையராஜா... தேம்பி அழுத கல்லூரி மாணவி... வைரலாகும் வீடீயோ...

இசைஞானி இளையராஜா இப்போது பல இடங்களில் நடக்கும் கூட்டங்களில் பங்கேற்று பேசி வருகிறார். அப்படி ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய இளையராஜா பாடல் பாட, அதைக்கேட்டு கல்லூரி மாணவி ஒருவர் தேம்பி, தேம்பி அழுதார்.

கிராமப்புற கலைகள் மீட்டு எடுக்கப்பட வேண்டும் என பல நிகழ்வுகளிலும் பங்கேற்று பேசி வருகிறார் இளையராஜா. அந்த வகையில் சென்னை கிண்டி செல்லம்மாள் மகளிர் கல்லூரியில் இசைஞானி இளையராஜாவின் 75வது பிறந்தநாள் விழா நடைபெற்றது.

இதில் கல்லூரி மாணவிகள் முன்பாக இளையராஜா பாடலும் பாடினார். அப்போது இளையராஜா தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ என்ற பாடலைப் பாட எல்லா மாணவிகளும் கைதட்டிக் கொண்டு இருந்தனர். அப்போது ஒரே ஒரு மாணவி மட்டும் தேம்பித் தேம்பி அழுது கொண்டு இருந்தார். இளையராஜாவின் இசையில் மயங்கித்தான் அவர் அப்படி அழுதார்.

அழுது முடிந்தவுடன் அந்த மாணவி தென் பாண்டி சீமையிலே பாடலை பாடக் கேட்க அந்த மாணவியின் கோரிக்கையை ஏற்று இளையராஜா அந்த பாடலைப் பாடினார்.

இப்போது இணையத்தில் அந்த வீடீயோ வைரலாகி வருகிறது...


நண்பர்களுடன் பகிர :