சுவீடனில் இண்டர்வியூ நடத்தும் நவீன ரோபோ Description: சுவீடனில் இண்டர்வியூ நடத்தும் நவீன ரோபோ

சுவீடனில் இண்டர்வியூ நடத்தும் நவீன ரோபோ


சுவீடனில் இண்டர்வியூ நடத்தும் நவீன ரோபோ

சுவீடன் நாட்டில் பிரபலமான கார்ப்பரேட் நிறுவனம் ஒன்று செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தன்னிடம் புதிதாக வேலைக்கு வருபவர்களுக்கு இண்டர்வியூ செய்யும் ரோபோவை வடிவமைத்து உள்ளனர்.

சுவீடன் நாட்டில் படிப்பு முடிந்து வேலை தேடுவோரில் 73 சதவிகிதம் பேர் தங்களது தோற்றம், பாலினம் ஆகியவற்றால் தாங்கள் நிராகரிக்கப்படுவதாகவும், அதனால் தங்களுக்கு வேலை கிடைப்பதில்லை எனவும் தெரிவித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து கார்ப்பரேட் நிறுவனங்களில் இண்டர்வியூ செய்து பணியில் எடுக்கும் ஹச்.ஆர் பொறுப்புக்கு பிரத்யேகமாக ரோபோ உருவாக்கப்பட்டு உள்ளது.

இந்த ரோபோவுடன் மைக்ரோ போன் கொண்டு எளிதாக உரையாடவும், அதன் கேள்விக்கு பதில் சொல்லவும் முடியும் மனிதர்கள் தங்கள் விருப்பு, வெறுப்புகளுக்கு இடம் கொடுப்பார்கள். ஆனால் இந்த ரோபாக்கள் மனிதர்களின் அறிவை மட்டுமே சோதிக்கும் என்பதால் சுவீடன் நாட்டு இளைஞர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். இந்த ஆண்டின் இறுதிக்குள் உலகின் பல நாடுகளுக்கும் இதே ரோபோக்களை உருவாக்கி, வேலையாட்களை எடுக்க அந்நிறுவனம் உத்தேசித்து உள்ளது. .


நண்பர்களுடன் பகிர :