துப்பாக்கிக்கு லைசென்ஸ் கேட்டு மனு கொடுக்க வந்த சகோதிரிகள்...! Description: துப்பாக்கிக்கு லைசென்ஸ் கேட்டு மனு கொடுக்க வந்த சகோதிரிகள்...!

துப்பாக்கிக்கு லைசென்ஸ் கேட்டு மனு கொடுக்க வந்த சகோதிரிகள்...!


துப்பாக்கிக்கு லைசென்ஸ் கேட்டு மனு கொடுக்க வந்த சகோதிரிகள்...!

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் சகோதிரிகள் தங்களுக்கு துப்பாக்கி வைத்துக் கொள்ள உரிமம் கேட்டு வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பெண்களுக்கு பாதுகாப்பு கேள்விக்கு உரியதாக உள்ளதாகவும், அதனால் தங்களை காத்துக் கொள்ள துப்பாக்கி உரிமம் வேண்டும் எனவும் கோவை ஆட்சியரிடம் கோவையை அடுத்த நல்லாம் பாளையத்தைச் சேர்ந்த சகோதிரிகள் கல்லூரி மாணவி தமிழ் ஈழம், பள்ளி மாணவி ஓவியா ஆகியோர் இந்த மனுவை ஆட்சியரிடம் கொடுத்தனர்.

அவர்கள் கொடுத்த மனுவில், பெண்களுக்கான பாதுகாப்பை அரசு உறுதி செய்யவில்லை எனவும், இதனால் தங்களை பாதுகாக்க வேறு வழியில்லாமல் துப்பாக்கி வைத்துக் கொள்ள உரிமம் கேட்பதாக அந்த மனுவில் கூறியிருந்தனர்.

பொள்ளாச்சி சம்பவம் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் சகோதிரிகள் கொடுத்த இந்த மனு கோவையை பரபரப்பு ஆக்கி உள்ளது.


நண்பர்களுடன் பகிர :