கடுங்குளிரில்...மலைப்பகுதியில் குழந்தைக்கு காவல் நின்ற நாய்! Description: கடுங்குளிரில்...மலைப்பகுதியில் குழந்தைக்கு காவல் நின்ற நாய்!

கடுங்குளிரில்...மலைப்பகுதியில் குழந்தைக்கு காவல் நின்ற நாய்!


கடுங்குளிரில்...மலைப்பகுதியில் குழந்தைக்கு காவல் நின்ற நாய்!

விளையாடிக் கொண்டிருந்த போது தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறிய குழந்தை அடர் புதர் சூழ்ந்த பகுதியில் சிக்கிக் கொண்டது. அந்த குழந்தையை நாய் ஒன்று இரவு முழுவதும் பாதுகாத்து உள்ளது.

ஆஷ்திரேலியாவின் குயின்ஷ்லாந்து மாகாணத்தை சேர்ந்த மூன்று வயது குழந்தை அரோரா, விளையாடிக் கொண்டிருந்த போது வீட்டை விட்டு வெளியேறினார். அப்போது அந்த குழந்தை தொலைந்து போனது. குடும்பத்தினர் தங்கள் குழந்தையை காணவில்லை என தேடத் துவங்கினர்.

அவர்களது வீட்டில் நாய் ஒன்று வளர்த்து வந்தனர். மாக்‌ஷ் என்னும் பெயர் கொண்ட அந்த நாய்க்கு காது, கண்ணில் குறைபாடும் கொண்டது. குழந்தை விளையாடிக் கொண்டிருக்கும் போதே வெளியே சென்றதைப் பார்த்த நாய், அரோராவின் பின்னாலேயே சென்றது. மறுநாள் காலையில் ஒரு மலைப்பகுதியில் குழந்தையை பெற்றோர் பார்த்தனர். ஆனால் அதுவரை குழந்தையை அந்த நாய் பாதுகாப்பாக பார்த்துக் கொண்டு இருந்தது. சற்றேறக்குறைய 16 மணி நேரம் இப்படி குழந்தையை நாய் தன் கண் பாதுகாப்பிலேயே வைத்திருந்தது.

வீட்டில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் தூரம் தள்ளி நடந்த நிகழ்வு இது. குழந்தையின் சத்தம், நாயின் குரைப்புச் சத்தம் கேட்டு குழந்தையின் பாட்டி மலையை நோக்கி சென்றார். உடனே அந்த நாய் ஓடி வந்து குழந்தை அரோரா இருக்கும் இடத்துக்கு அழைத்துச் சென்று உள்ளது.

அந்த குளிரில் இரவு வெப்பநிலை 15 டிகிரியாக இருந்த போதும் குழந்தை நாயுடன் சேர்ந்து ஒரு பாரையின் அடியில் தங்கியிருந்தது.

இந்த நாய் இப்போது ஆஷ்திரேலியாவில் வைரலாகி வருகிறது. இந்த நாய்க்கு கெளரவ போலீஷ் நாய் என பட்டமும் கொடுத்து பாராட்டியுள்ளது அங்குள்ள காவல்துறை!


நண்பர்களுடன் பகிர :