அவுங்க சாகணும்...ஆத்திரத்தில் வீடீயோ வெளியிட்ட நடிகை ஐஸ்வர்யா பொள்ளாச்சி சம்பவத்துக்கு கோடம்பாக்கத்தில் ரியாக்சன் Description: அவுங்க சாகணும்...ஆத்திரத்தில் வீடீயோ வெளியிட்ட நடிகை ஐஸ்வர்யா பொள்ளாச்சி சம்பவத்துக்கு கோடம்பாக்கத்தில் ரியாக்சன்

அவுங்க சாகணும்...ஆத்திரத்தில் வீடீயோ வெளியிட்ட நடிகை ஐஸ்வர்யா பொள்ளாச்சி சம்பவத்துக்கு கோடம்பாக்கத்தில் ரியாக்சன்


அவுங்க சாகணும்...ஆத்திரத்தில் வீடீயோ வெளியிட்ட நடிகை ஐஸ்வர்யா பொள்ளாச்சி சம்பவத்துக்கு கோடம்பாக்கத்தில் ரியாக்சன்

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை ஜெயிலில் போடாதீங்க...அவர்கள் சாகணும் என பரபரப்பு வீடீயோ ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகை ஐஸ்வர்யா.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு கொண்டதன் மூலம் புகழின் உச்சத்துக்கு சென்றவர் நடிகை ஐஸ்வர்யா. இவர் பொள்ளாச்சி சம்பவம் தொடர்பாக மிகுந்த கோபத்தோடு வீடீயோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் பேசியிருப்பது என்னவென்றால் 'பொள்ளாச்சி சம்பவம் தொடர்பான வீடீயோஸ் பார்த்தேன். என்னால பார்த்துட்டு தாங்க முடியல. ரொம்ப கஷ்டமா இருக்கு. அடிக்கடி திருப்பி, திருப்பி இந்த மாதிரி போயிட்டு இருக்கு. சோ பார்க்கும் போது ரொம்ப, ரொம்ப கஷ்டமா இருக்கு.

ஏன்னா, நல்ல பிரண்ட்ஷிப் ரிலேசனில் இருந்துட்டு நிறைய தப்பு பண்ணுறாங்க இந்த ஜெனரேசன் பசங்க. அம்மா இருக்கட்டும், அக்கா இருக்கட்டும், தங்கச்சி இருக்கட்டும்...இதையெல்லாம் யோசிக்குறதே இல்ல. இப்போல்லாம் யாரு எவ்வளவு பெரிய தப்பு செஞ்சாலும் இப்போவெல்லாம் இரண்டு, மூணு மாசம் தான் ஜெயிலில் இருக்குறாங்க. அதுக்கு அப்புறம் பெயில் கிடைச்சுடுது. தவறு செய்வதும், ஜெயிலுக்கு போயிட்டு பெயிலில் வருவதும் பிராக்டீஸாகிடுச்சு.

இவர்களுக்கு நம் போலீஸ் மேல பயம் இல்லை. ஆகையால் இவங்களை ரிமாண்ட் பண்ணாதீங்க. அவுங்க சாகணும்.”அவ்வளவு தான்.


நண்பர்களுடன் பகிர :