தோனி ஏன், எப்போது தேவை? ஷேன் வார்ன் அடித்த ஷாட்.. தோனியை மனதார புகழ்ந்த ஆஸ்திரேலிய வீரர்..! Description: தோனி ஏன், எப்போது தேவை? ஷேன் வார்ன் அடித்த ஷாட்.. தோனியை மனதார புகழ்ந்த ஆஸ்திரேலிய வீரர்..!

தோனி ஏன், எப்போது தேவை? ஷேன் வார்ன் அடித்த ஷாட்.. தோனியை மனதார புகழ்ந்த ஆஸ்திரேலிய வீரர்..!


தோனி ஏன், எப்போது தேவை? ஷேன் வார்ன் அடித்த ஷாட்.. தோனியை மனதார புகழ்ந்த ஆஸ்திரேலிய வீரர்..!

இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் தோனியின் விளையாட்டை விமர்சிப்பவர்கள் தான் என்ன பேசுகிறோம் என்றே தெரியாமல் பிதற்றுபவர்கள் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழல் பந்து வீச்சாளர் ஷேன் வார்ன் தெரிவித்த கருத்து வைரலாகி வருகிறது.

நான்காண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியானது வரும் மே மாதம் 30ம் தேதி, தொடங்க இருக்கிறது. இதற்காக அனைத்து நாடுகளிலும் வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்திய அணியும் அதற்கு தயாராகும் வகையில் ஆஸ்திரேலியாவுடன் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாண்டது.

இந்த தொடரை ஆந்திரேலியா அணி கைப்பற்ற, கடைசி இரண்டு போட்டிகளில் இந்தியாவின் தோல்விக்கு தோனி இல்லாததே காரணம் என விமர்சிக்கப்பட்டது. இந்த நிலையில் இக்கருத்துக்கு வலு சேர்க்கும் வகையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழல்பந்து வீச்சாளர் ஷேன் வார்ன், ‘’இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி விளையாடுவது குறித்து விமர்சிப்பவர்கள் தான் என்ன பேசுகிறோம் எனத் தெரியாமலே பிதற்றல் செய்பவர்கள் எனக் கூறியுள்ளார்.

ஆட்டத்தில் நிலை மோசமாக செல்லும் போது தோனி போன்ற ஒரு அனுவம்மிக்க வீரர் அணியில் இருப்பது அவசியம். தோனியிடம் இருக்கும் அந்த அனுபவ அறிவும், அவரது தலைமை அனுபவங்களும் உலக கோப்பை போட்டியின் போது இந்தியாவுக்கு முக்கியமானது.”எனத் தெரிவித்துள்ளார். மேலும் உலகக்கோப்பை போட்டியை பொறுத்தவரை இந்தியா , இங்கிலாந்து அணிகளுக்கு நல்ல வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதேபோன்று தோனியை உயர்வாகக் கூறும் கருத்து ஒன்றை முன்னர் சுனில் கவாஸ்கரும் கூறி இருந்தார்.


நண்பர்களுடன் பகிர :