பொள்ளாச்சி சம்பவத்தில் புதிய திருப்பம்... அதிரடியாக வீடீயோ வெளியிட்ட பார் நாகராஜ்..! Description: பொள்ளாச்சி சம்பவத்தில் புதிய திருப்பம்... அதிரடியாக வீடீயோ வெளியிட்ட பார் நாகராஜ்..!

பொள்ளாச்சி சம்பவத்தில் புதிய திருப்பம்... அதிரடியாக வீடீயோ வெளியிட்ட பார் நாகராஜ்..!


பொள்ளாச்சி சம்பவத்தில் புதிய திருப்பம்...   அதிரடியாக  வீடீயோ வெளியிட்ட பார் நாகராஜ்..!

பொள்ளாச்சியில் இருந்து வரும் செய்திகள் நம் தேசத்துக்கே தலைகுனிவை ஏற்படுத்தி வருகின்றன. இப்படியான சூழலில் இதில் புதிய திருப்பமாக பாலியல் வழக்கில் தொடர்பு இல்லாத தன் பெயரை ஊடகங்கள் கொச்சைப்படுத்துகின்றன என வீடீயோ ஒன்றை வெளியிட்டுள்ளார் பார் நாகராஜ்.

அதில் அவர் பேசியிருக்கும் விசயங்களை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்...

எல்லாருக்கும் வணக்கம்..நான் தான் பொள்ளாச்சி பார் நாகராஜ். பொள்ளாச்சியில் நடக்கும் பிரச்னையில் கைது செய்யப்பட்டு இருக்கேன். எல்லா சேனல்களிலும் என்னுடைய புகைப்படமும், வீடீயோவும் இருப்பதாக டெலிகாஸ்ட் செய்துள்ளனர். நீங்களே பாருங்க...அதில் இருக்கும் புகைப்படம், பாலியல் வழக்கில் நான்கு பேரில் ஒருவராக இருக்கும் சதீஸ்குமாரின் புகைப்படம்.

சரியான தகவலை மக்களிடம் கொண்டு போய் சேர்க்கணும்ன்னு கேட்டுக்குறேன். என்னோட உருவத்தையும், என் அங்க அடையாளத்தையும் பார்த்துக்கோங்க. என்னோட கையில் கடந்த பத்து வருசங்களாகவே கதவு வெட்டுன தழும்பு இருக்கும். பச்சையாகத் தெரியுது அது சதீஸ்ன்னு...ஆனா என் பேரைச் சொல்லி எல்லா சேனலிலும் போட்டு, போட்டு காட்டுறீங்க. என் குடும்பத்துக்கும், எனக்கும் ரொம்ப மன உலைச்சலைக் கொடுக்குறீங்க. இதை நான் தான் என நிரூபிக்காவிட்டால் எல்லார் மீதும் மானநஷ்ட வழக்குப் போடுவேன்.

என் மேல் எந்த புகாரும் கிடையாது. நான் பாதிக்கப்பட்ட பெண்ணோட அண்ணனை மிரட்டுனதா என் மேல் காவல்துறை வழக்குப்பதிவு பண்ணிருக்காங்க. அதுல நான் பிணையில் வந்துருக்கேன். எந்த நேரம் கூப்பிட்டாலும் காவல்துறை விசாரணைக்கு வரணும்ன்னு சொல்லிருக்காங்க. சட்டரீதியாக சந்திக்கத் தயாராக இருக்கேன். ஆனால் ஊடகங்கள் சதீஸின் படத்தைக் காட்டி என் பெயரைச் சொல்லுவதால் மன உலைச்சலில் இருக்கேன். தயவு செய்து பொய் செய்திகளை போடாதீங்க.

நான் பாலியல் வழக்கில் கிடையாது. அடிதடி வழக்கில் இருக்கேன். அடிதடி வழக்கில் எப்போ கூப்பிட்டாலும் விசாரணைக்கு வரத் தயாராக இருக்கேன்.”என அதில் பேசியுள்ளார்.


நண்பர்களுடன் பகிர :