ரசிகர்களின் உயிரை காப்பாற்ற ஓடி சென்று வேலியை தாங்கிய விஜய் : இணையத்தில் வைரலாகும் வீடியோ Description: ரசிகர்களின் உயிரை காப்பாற்ற ஓடி சென்று வேலியை தாங்கிய விஜய் : இணையத்தில் வைரலாகும் வீடியோ

ரசிகர்களின் உயிரை காப்பாற்ற ஓடி சென்று வேலியை தாங்கிய விஜய் : இணையத்தில் வைரலாகும் வீடியோ


ரசிகர்களின் உயிரை காப்பாற்ற ஓடி சென்று வேலியை தாங்கிய விஜய் : இணையத்தில் வைரலாகும் வீடியோ

விஜய் அட்லீ கூட்டணியில் உருவான தெறி, மெர்சல் வெற்றியைத் தொடர்ந்து, மூன்றாவது முறையாக விஜய்யை வைத்து இயக்குகின்றார் அட்லி. நடிகர் விஜய்யின் 63வது படம்,இப்படத்திற்கு இன்னும் பெயரிடப்படாததால், படத்துக்கு "தளபதி 63"’ என தற்காலிகமாக பெயர் வைத்துள்ளது படக்குழு.

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும் இவர்களுடன் கதிர், யோகிபாபு, டேனியல் பாலாஜி மற்றும் விவேக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கின்றார், இந்தப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகின்றது.

இப்பட கதை விளையாட்டை மையப்படுத்தி உருவாக்கப்படுகின்றது. இந்தப் படத்துக்கான படப்பிடிப்பு பிரசாத் லேப், தனியார் கல்லூரி என சென்னையின் பல்வேறு பகுதியில் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு நடக்கும் இடங்களில் எல்லாம் நடிகர் விஜய்யைக் காண அவரது ரசிகர்கள் கூட்டம் குவிந்து காணப்படுகின்றது.

இந்தநிலையில் தற்போது சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகின்றது. அதில், தன்னைக்காண வந்த ரசிகர்களுக்கு கை அசைத்து கட்டியபடியே விஜய் ரசிகர்கள் வேலியின் அருகே வருகிறார். ரசிகர்களின் கூட்டமும் , அவர்களின் ஆர்வம் மிகுதியால் வேலியானது உடைந்து கீழே சரிந்து விழ ஆரம்பிக்கின்றது, இதனை பார்த்த நடிகர் விஜய் சற்றும் தயங்காமல், ரசிகர்கள் விழாமலும், அடிபடாமல் இருக்க, ஓடி சென்று அந்த வேலியை தன் கையால் தாங்குகின்றார். இதனை பார்த்த படக்குழுவும் உடனே வந்து அந்த வேலியை தாங்குகின்றனர். இதனால் பெரும் விபத்து நடிகர் விஜய்யால் தவிர்க்கப்பட்டுள்ளது. நீங்களே பாருங்கள் அந்த விடீயோவை..


நண்பர்களுடன் பகிர :