தினசரி அன்னாசி சாப்பிடுங்க...அருமையான பலனை பெறுங்க..! Description: தினசரி அன்னாசி சாப்பிடுங்க...அருமையான பலனை பெறுங்க..!

தினசரி அன்னாசி சாப்பிடுங்க...அருமையான பலனை பெறுங்க..!


 தினசரி அன்னாசி சாப்பிடுங்க...அருமையான பலனை பெறுங்க..!

பொதுவாகவே பழங்கள் நம் உடலுக்கு நன்மைகளை செய்யக் கூடியவை. நாம் அள்ளிக் கட்டி உண்ணும் திட உணவுகளைக் காட்டிலும் பழ வகைகளில் எளிதில் சீரணமாகும் தன்மை அதிகம். அதிலும் அன்னாசிப் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் மிக அதிகம். அது குறித்து தெரிந்துகொள்ள மேலே படியுங்கள்.

அன்னாசியில் மாங்கனீஸ் உள்ளிட்ட சத்துக்கள் அதிகமாக உள்ளது. இதேபோல் வெப்பச்சலன பகுதியிலேயே அதிகமாக விளையும் அன்னாசியில் புரதத்தை செரிக்கக்கூடிய புரோமலைன் என்னும் என்சைம் அதிக அளவில் இருக்கிறது.இது நமது உடலில் இரத்தம் உறைந்து விடாமலும் பாதுகாக்கிறது. மேலும் அன்னாசியில் வைட்டமின் சி சத்தும் அதிக அளவு உள்ளது.

இதனால் இதயநோய் ஆபத்தில் இருந்தும் அன்னாசிப் பழம் நம்மை பாதுகாக்கிறது. மேலும் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் அன்னாசி துணை செய்கிறது அன்னாசியில் அதிகமாக உள்ள மாங்கனீஸ் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை சர்ரென்று ஏற்றும்.

அன்னாசியில் உள்ள தையாமின், வைட்டமின் பி,ஆகியவை நம் உடலில் உள்ள சுரப்பிகளின் செயல்பாட்டை சீராக்குகிறது. இதனால் உடல் சோர்வில் இருந்து நம்மை அது பாதுகாக்கிறது.அன்னாசி பழத்தில் சளித்தொல்லை இருக்காது. இதே போல் இபோதைய வரவான ப்ளூ காய்ச்சலுக்கு நம் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவதே காரணம். அதுபோன்ற அண்மைக்கால தொற்றுக்கும் அடிக்கடி அன்னாசிப் பழம் சாப்பிடுவது முற்றுப்புள்ளி வைத்துவிடும்.

இளம்பெண்கள் உட்பட அனைவரின் தொப்பையும் கரைக்கும் சக்தி அன்னாசிக்கு உண்டு. ஒரு முழு அன்னாசிப்பழத்தைச் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து அதில் போட்டு நன்றாகக் கிளறி ஒருடம்பர் தண்ணிர் ஊற்றிக் கொதிக்க வைக்க வேண்டும், இரவில் அதை அப்படியே வைத்திருந்து மறு நாள் காலையில் அதைப் பிழிந்து சாறு எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிடவேண்டும். பத்து நாட்கள் தொடர்ந்து இதேபோல் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தொப்பை கரைய ஆரம்பிக்கும் அன்னாசிக்காய்க்கு கர்ப்பப்பையை சுருக்கும் தன்மை உண்டு. எனவே கர்ப்பிணி பெண்கள் இப் பழத்தைத் தவிர்க்க வேண்டும்.


நண்பர்களுடன் பகிர :