உடலுக்கு உறுதி சேர்க்கும் இஞ்சி சாறு... குடிச்சு பாருங்க...நீங்களே மாற்றத்தை உணர்வீர்கள் Description: உடலுக்கு உறுதி சேர்க்கும் இஞ்சி சாறு... குடிச்சு பாருங்க...நீங்களே மாற்றத்தை உணர்வீர்கள்

உடலுக்கு உறுதி சேர்க்கும் இஞ்சி சாறு... குடிச்சு பாருங்க...நீங்களே மாற்றத்தை உணர்வீர்கள்


உடலுக்கு உறுதி சேர்க்கும் இஞ்சி சாறு... குடிச்சு பாருங்க...நீங்களே மாற்றத்தை உணர்வீர்கள்

இஞ்சி இடுப்பழகி என கமலஹாசன் படத்தில் வரும் பாடலைப் போல, இஞ்சி நம்மை இளமையோடும், அழகோடும் தக்கவைக்கும். இஞ்சி காய்ந்தால் சுக்கு ஆகி விடும். அந்த சுக்குக்கும் பல மருத்துவக் குணங்கள் உண்டு,

அதனால் தான் ”சுக்கில் சிறந்த மருந்தும் இல்லை சுப்பிரமணியருக்கு மேல் தேய்வம் இல்லை” என்ற பழமொழி உருவானது. நம் முன்னோர்கள் வாரம் ஒருமுறை இஞ்சிச்சாறு, தேன் கலந்து பருகினர்.

மனித வாழ்வையே நம் முன்னோர்கள் இஞ்சி, சுக்கை மையப்படுத்தி பிரித்துள்ளனர். அதாவது பிறந்தது முதல் 15 வயதுவரை இஞ்சியை சாப்பிட வேண்டும். இருபத்தி அஞ்சு வயது முதல் 45 வயது வரை சுக்கை உணவில் சேர்க்க வேண்டும். 45 வயதுக்கு மேல் கடுக்காயை உணவில் சேர்க்க வேண்டும் என்றும் முன்னோர்கள் வகுத்து உள்ளனர்.

அக்காலத்தில் புதன், சனிக்கிழமைகளில் கல் செக்கில் ஆட்டப்பட்ட நல்லெண்ணெயை உடல் முழுவதும் தேய்த்து, சூடான தண்ணீரில் குளித்து, குளித்து முடித்ததும் சுக்கை அரைத்து ஒரு சின்ன உருண்டையை சாப்பிடச் சொல்வார்கள். இதற்கு உடலில் பல நோய்களையும் அண்ட விடாத தன்மை உண்டு.

பொதுவாகவே வாசனை, காரத்திற்காக உணவில் சேர்க்கப்படும் இஞ்சிக்கு பசியைத் தூண்டும் தன்மை உண்டு. இது உமிழ்நீரைப் பெருக்கும். உடலுக்கு வெப்பத்தைக் கொடுத்து குடலில் உள்ள வாயுவை நீக்கும். இதே போல் காய வைத்த இஞ்சி தான் சுக்கு. இந்த சுக்கு, மிளகு இரண்டையும் பொடியாக்கி கருப்புக் கட்டியோடு சேர்த்துக் கொதிக்க வைத்து, சுக்கு கசாயமாக குடித்தால் உடல் தளர்ச்சி நீங்கும். புதுத்தெம்பு கிடைக்கும்.

இதேபோல் இஞ்சியை தோல் நீக்கி சின்ன சின்ன துண்டுகளாக்கி அவற்றைத் தேனில் ஊற வைத்து, ஒரு மாதம் ஊறிய பின்னர் தினமும் காலை உணவுக்கு முன்னர் இரண்டு துண்டுகள் சாப்பிட்டு வந்தால் பசியின்மை நீங்கும். இதேபோல் குழந்தைகளுக்கு ஏற்படும் அஜீரணத்திற்கு இஞ்சிச்சாறு எடுத்து அதை தொப்புளை சுற்றி பற்றுப் போட்டால் குணமாகி விடும்.

பிள்ளை பெற்ற பெண்களுக்கு இஞ்சிசாறு, சுக்கு களி நல்ல மருந்து. வயிற்று வலிக்கும் இஞ்சிச்சாறை தேனுடன் கலந்து இரண்டு, மூன்று நாள்கள் மூன்று வேளையும் குடிக்கலாம். இது இருமலுக்கும் அருமருந்து,

பொதுவாகவே மூஞ்சியை உம்மென்று வைத்திருப்பவர்களை இஞ்சி தின்ன குரங்கு போல் என கிராமங்களில் சொல்வார்கள். இஞ்சி சாப்பிடும் போது வேண்டுமானால் உம்மென்று இருக்கலாம். ஆனால் உங்கள் உடலை இஞ்சி ஜம்மென்று மாற்றி விடும்.


நண்பர்களுடன் பகிர :