எண்ணற்ற பலன்களைக் கொடுக்கும் எருக்கன் இலை.. சாதாரணமா வளர்வதால் சாதாரணமா நினைச்சுடாதீங்க..! Description: எண்ணற்ற பலன்களைக் கொடுக்கும் எருக்கன் இலை.. சாதாரணமா வளர்வதால் சாதாரணமா நினைச்சுடாதீங்க..!

எண்ணற்ற பலன்களைக் கொடுக்கும் எருக்கன் இலை.. சாதாரணமா வளர்வதால் சாதாரணமா நினைச்சுடாதீங்க..!


எண்ணற்ற பலன்களைக் கொடுக்கும் எருக்கன் இலை.. சாதாரணமா வளர்வதால் சாதாரணமா நினைச்சுடாதீங்க..!

சாலை ஓரங்கள், பராமரிப்பு இல்லாத வயல்வெளி, கட்டிடங்கள், தோட்டம்ன்னு பல இடங்களில் எருக்கன் செடியை பார்த்திருப்போம். இதை யாரும் தண்ணீர் விட்டெல்லாம் வளர்ப்பது இல்லை. இது சாதாரணமாகவே வளரக் கூடியது. எந்த மழை, வெயிலையும் தாங்கி வளரும் இந்த எருக்கன் செடி தண்ணீர் இல்லாமல் 12 ஆண்டுகள் கூட நிற்குமாம்.

இந்த எருக்கனுக்கு ஏராளமான மருத்துவக் குணங்களும் இருக்கிறது. சில வெள்ளெருக்கன் வேர்கள் அதிசயமாக விநாயகர் உருவிலும் இருக்கும். எருக்கன் இலை வேரில் வினாயகர் சிலை செய்து வழிபட்டால் வேண்டியது நடக்கும் என்பது ஐதீகம். எருக்கன் பூவின் பாலானது தீயைப் போன்று சுடும் தன்மை கொண்டது. விஷக்கடியை குணமாக்கும் ஆற்றல் இதற்கு உண்டு. புழுக்களைக் கொல்லும்., இதன் பூ, பட்டைக்கு பசி உண்டாக்குதல், கோழையகற்றுதல் ஆகிய பண்பும் உண்டு.

எருக்கன் இலை நஞ்சை நீக்கும். வீக்கம், கட்டிகளைக் கரைத்து வேதனையைக் குறைக்கும். எலி கடித்தாலும், பாம்பு, தேள் போன்ற விச ஐந்துக்கள் கடித்தாலும் எருக்கன் இலையை அரைத்து 5 கிராம் அளவு பாலில் கலந்து சாப்பிடலாம். இதனால் உடனே விஷம் இறங்கிவிடும்.

சிலருக்கு தினசரி மலம் வெளியேறுவதில் சிக்கல் இருக்கும். அப்படி மலக்கட்டு இருப்பவர்கள் 20 மில்லி சிற்றாமணக்கு எண்ணெயில் 3 முதல் 5 துளி எருக்கன் பால் விட்டுக் கொடுத்தால் மலச்சிக்கல் போய்விடும். குதிங்கால் வலி உள்ளவர்கள் பழுத்த எருக்கன் இலையை குதிங்கால் வீக்கத்தின் மேல் வைத்து சுட்ட செங்கலை அதன் மேல் வைத்து ஒத்தடம் கொடுத்தால் குணமாகும்.

எருக்கன் இலையையும், அதன் வேர் பட்டையையும் சம அளவில் உலர்த்திய பொடி 2 முதல் 3 கிராம் அளவு பசும் எண்ணெயில் கலந்து இருளை வீதம் 96 நாள்கள் வரை சாப்பிட்டால் குஷ்ட வியாதியும் குணமாகும். யானைக்கால் நோயும் போகும்.

சிலருக்கு வலிப்பு நோய் பாடாய்படுத்தும். அவர்களுக்கும் எருக்கன் நல்ல மருந்து. பொதுவாக எருக்கன் இலையில் வெட்டுக்கிளி எச்சம் இட்டிருக்கும். அந்த இலையை எடுத்து உலர்த்திய பொடி 30 கிராமும்டன், மிளகுத்தூள் 30 கிராம், உந்தாமணி இலைதூள் 30 கிராம் சேர்த்து வைக்கவும். இந்த சூரணத்தை மூக்குப்பொடி உறிஞ்சுவது போல் உறிஞ்சினால் வலிப்பு நோய்க்கு டாடா சொல்லி விடலாம்.

நாள்பட்ட ஆஸ்துமாவுக்கு ஆளானவர்கள் வெள்ளெருக்கன் பூ 100 கிராம், மிளகு 50 கிராம், இளவங்கம், குங்குமப்பூ, கோரோசனை வகைக்கு 10 கிராம் சேர்த்து அரைத்து மிளகு சைஸ்க்கு மாத்திரையாக செய்து உலர்த்தி வைக்க வேண்டும். இதனை காலை, மாலையில் ஒரு மாத்திரை தேனில் கலந்து 96 நாள்கள் சாப்பிட்டால் ஆஸ்துமா, வீசிங், இருமல் சார்ந்த வியாதிகள் ஓடிவிடும். இதே மாத்திரை இரண்டை அஞ்சு கிராம் ஜாதிக்காய் தூளோடு பாலில் கலந்து சாப்பிட்டால் சிற்றின்பமும் பெருகும்.

வாதவலி, வீக்கத்தையும் எருக்கன் ஓட, ஓட விரட்டும். இத்தனை பெருமை வாய்ந்த எருக்கனை இனி லேசாக நினைக்க மாட்டீர்கள் தானே? உங்க வீட்டுப் பக்கம் இனி எருக்கனை பார்த்தா மிஸ் பண்ணிடாதீங்க..


நண்பர்களுடன் பகிர :