குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க வேண்டுமா? ஆஸ்பத்திரியே வேண்டாம்: வீட்டிலேயே சூப் குடுங்க போதும்..! Description: குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க வேண்டுமா? ஆஸ்பத்திரியே வேண்டாம்: வீட்டிலேயே சூப் குடுங்க போதும்..!

குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க வேண்டுமா? ஆஸ்பத்திரியே வேண்டாம்: வீட்டிலேயே சூப் குடுங்க போதும்..!


குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க வேண்டுமா?  ஆஸ்பத்திரியே வேண்டாம்: வீட்டிலேயே சூப் குடுங்க போதும்..!

உடலில் பல்வேறு நோய்கள் வருவதற்கு அடிப்படை காரணமே நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து போவது தான். நோய் எதிர்ப்புத்திறன் வலுவாக இருந்தால் அவ்வளவு எளிதில் எந்த நோய்களும் அண்டாது. அதிலும் குழந்தைகளுக்கு இதனால் ஏற்படும் பாதிப்புகளை கேட்கவே வேண்டாம். குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஆங்கில மருந்துகளுக்கு பதிலாக வீட்டிலேயே சுலபமாக ஒரு முயற்சியை செய்து பார்க்கலாம். அதுவும் சாதாரணமாக ‘சூப்’ வடிவில்!

ஒரு பாத்திரத்தில் நான்கு டம்ளர் அளவுக்குத் தண்ணீர் ஊற்றி கொதிக்க வேண்டும். அது நன்றாக கொதி வந்ததும், சின்ன வெங்காயத்தை பொடியாக்கி இதனுடன் சேர்த்துக் கொள்ளலாம். சின்ன வெங்காயம் இல்லாத பட்சத்தில் பாதியளவு பெரிய வெங்காயத்தைப் போடலாம். தொடர்ந்து அஞ்சு, ஆறு வெள்ளைப் பூண்டை இதே போல் பொடியாக நறுக்கி சேர்க்க வேண்டும்.

அதனோடு அரை ஸ்பூன் அளவுக்கு சீரகம், தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க வேண்டும். இதில் நாம் போட்டு இருக்கும் வெங்காயமும், பூண்டும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் முக்கியப்பங்கு வகிக்கிறது. இப்போது அது கொதித்துக் கொண்டிருக்கும் போதே கொஞ்சம் மிளகையும், கொஞ்சம் கொத்தமல்லி தளையும் சேர்த்து பாத்திரத்தின் வாய் பகுதியை மூடிவிட்டு, அஞ்சு நிமிடங்களுக்கு மிதமான சூட்டில் கொதிக்க வைக்க வேண்டும்.

இப்போது வெங்காயம், பூண்டின் சத்துகள் அனைத்தும் இந்த பாத்திரத்தில் உள்ள தண்ணீருக்கு வந்துவிடும். இப்போது இந்த கலவையில் ஒரு ஸ்பூன் அளவுக்கு அரிசி மாவில், இரண்டு ஸ்பூன் அளவுக்கு தண்ணீர் சேர்த்து இதில் ஊத்தணும். இது சூப்பை கட்டியாக்க உதவும். கடைசியாக மீண்டும் கொஞ்சம் கொத்தமல்லி தளைகளை தூவி சூப்பை இறக்கிடலாம். இதை குழந்தைகளுக்கும் கொடுக்கலாம்.

குழந்தைகளுக்கு அடிக்கடி வரும் சளி, இருமல் பிரச்னைகளுக்கு நோய் எதிர்ப்பு தன்மை குறைந்து போவதே காரணம். இந்த சூப்பை மட்டும் குழந்தைகளுக்கு வாரத்துக்கு மூன்று முறை கொடுத்துப் பாருங்க. அப்புறம் குட்டி சுட்டீஸை ஆஸ்பத்திரிக்கே கூட்டிட்டு போக மாட்டீங்க!


நண்பர்களுடன் பகிர :