கொட்டும் மழையில் மனிதத்துடன் காத்திருந்த 5000 பேர்.. புற்றுநோய் பாதித்த சிறுவனுக்கு ஸ்டெம்செல் வழங்க குவிந்த உருக்கம்..! Description: கொட்டும் மழையில் மனிதத்துடன் காத்திருந்த 5000 பேர்.. புற்றுநோய் பாதித்த சிறுவனுக்கு ஸ்டெம்செல் வழங்க குவிந்த உருக்கம்..!

கொட்டும் மழையில் மனிதத்துடன் காத்திருந்த 5000 பேர்.. புற்றுநோய் பாதித்த சிறுவனுக்கு ஸ்டெம்செல் வழங்க குவிந்த உருக்கம்..!


கொட்டும் மழையில் மனிதத்துடன் காத்திருந்த 5000 பேர்..  புற்றுநோய் பாதித்த சிறுவனுக்கு ஸ்டெம்செல் வழங்க குவிந்த உருக்கம்..!

ஸ்டெம் செல் என்பதன் தமிழாக்கம் தொப்புள் கொடி என்பதாகும். மருத்துவ உலகில் இப்போது இந்த வார்த்தை மிகவும் பிரசித்திப் பெற்று வருகிறது. அதாவது குழந்தை பிறந்ததும், தாயின் தொப்புள் கொடியை சேகரம் செய்து வைப்பார்கள். குழந்தைகள் வளர்ந்த பின்னர் எதுவும் நோய் வாய்ப்பட்டால் அப்போது இந்த தொப்புள் கொடி மிகச்சிறந்த மருந்தாக இருக்கும்.

புற்றுநோய் தாக்கிய 5 வயது சிறுவன் ஒருவனுக்கு இந்த ஸ்டெம்செல் தானம் வழங்க 5000 க்கும் அதிகமானோர் கொட்டும் மழையில் காத்திருந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இங்கிலாந்து நாட்டில் வோர்செஸ்டர் பகுதியை சேர்ந்த 5 வயது சிறுவன் ஆஸ்கர் லீ. இந்த சிறுவன் ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டான். சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் மூன்று மாதங்களுக்குள்ளாக ஹீமோதெரபி சிகிட்சை மூலம் ஸ்டெம் செல் மாற்று சிகிட்சை செய்தால் மட்டுமே சிறுவனை காப்பாற்ற முடியும் என சொல்லியிருக்கிறார்கள். இதனால் சிறுவனின் பெற்றோர் நிலைகுலைந்த நிலையில், அவனது பள்ளியின் தலைமையாசிரியர் சிறுவனுக்கு ரத்த புற்றுநோய் இருப்பது குறித்தும், அவனுக்கு ஸ்டெம்செல் தேவை என்பது குறித்தும் சமூகவலைதளங்களில் பதிவிட்டார்.

அதனைப் பார்த்துவிட்டு சிறுவனுக்கு உதவ பள்ளி வளாகத்துக்கு வந்தவர்களின் எண்ணிக்கை 4855! இத்தனைக்கும் இது நடந்தது ஒரு கொட்டும் மழையில்...இதை பார்த்து உருகிய சிறுவனின் பெற்றோர், தங்கள் மகன் ஆஸ்கார் விரைவில் உடல்நலம் பெறுவான் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இந்த மனிதத்துவமான விசயம் இப்போது இணையத்திலும் உலக அளவில் டிரெண்டாகி விட்டது.


நண்பர்களுடன் பகிர :