மாறலாம்... மாற்றலாம்... விழிப்புணர்வு ஊட்டி கலக்கும் நடிகர் சூர்யா Description: மாறலாம்... மாற்றலாம்... விழிப்புணர்வு ஊட்டி கலக்கும் நடிகர் சூர்யா

மாறலாம்... மாற்றலாம்... விழிப்புணர்வு ஊட்டி கலக்கும் நடிகர் சூர்யா


மாறலாம்... மாற்றலாம்... விழிப்புணர்வு ஊட்டி கலக்கும் நடிகர்  சூர்யா

நடிகர் சூர்யா திரைத்துறைக்கு அப்பாலும் ஓசைபடாமல் பல விசயங்களை செய்து வருபவர். அவர் இப்போது செய்துள்ள ஒரு முயற்சி சமூக ஆர்வலர்கள், இயற்கை ஆர்வலர்கள் ஆகியோரையும் அவரது பக்கம் திருப்பி உள்ளது.

சிவக்குமாரின் மகன் என்னும் அடையாளத்துடன் திரையில் நடிக்க வந்த சூர்யா, இன்று சூர்யாவின் தந்தை என சிவகுமார் பெருமைப்படும் இடத்தை அடைந்து இருக்கிறார். நடிகராக மட்டும் இல்லாமல் தனது 2 டி தயாரிப்பு நிறுவனம் மூலம் முப்பத்தி ஆறு வயதினிலே உள்பட பல நல்ல படங்களையும் தயாரித்து உள்ளார்.

இதுபோக தனது அகரம் பவுண்டேசன் மூலமாக ஏழைக் குழந்தைகளின் கல்விக்கும் தொடர்ந்து உதவி வருகிறார். இப்போது அவர் தமிழக அரசின் வழிகாட்டுதலும் பிளாஷ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு குறும்படம் ஒன்றிலும் நடித்து அசத்தி உள்ளார்.

தமிழக அரசு கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் மறுமுறை பயன்படுத்த முடியாத நெகிழிக்கு தடை விதித்திருந்தது. இந்நிலையில் தான் சூர்யா நடித்து உள்ள குறும்படம் செம வரவேற்பை பெற்று உள்ளது. பள்ளி ஒன்றில் மாணவர்கள் மத்தியில் பேசுவதில் இருந்து துவங்கும் அந்த வீடியோவில் நடிகர் சூர்யா பிளாஷ்டிக் பயன்பாட்டின் தீமைகள், பிளாஷ்டிக் பயன்பாட்டைத் தடுக்கும் மாற்றுப் பொருள்கள் என்ன? என்றெல்லாம் அனைவருக்கும் புரியும் வகையில் எளிய நடையில் எடுத்து வைக்கிறார்.

முன்னணி நடிகரின் இந்த விழிப்புணர்வு பணியை நாமும் பாராட்டலாம் தானே? வீடீயோ இணைப்பு கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.


நண்பர்களுடன் பகிர :