செம்ம டைமிங்ல், மேக்ஸ்வெல்லை ரன் அவுட் செய்த தோனி : வைரல் வீடியோ Description: செம்ம டைமிங்ல், மேக்ஸ்வெல்லை ரன் அவுட் செய்த தோனி : வைரல் வீடியோ

செம்ம டைமிங்ல், மேக்ஸ்வெல்லை ரன் அவுட் செய்த தோனி : வைரல் வீடியோ


செம்ம டைமிங்ல், மேக்ஸ்வெல்லை ரன் அவுட் செய்த தோனி : வைரல் வீடியோ

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் போட்டி தொடர் நடைபெற்று வருகிறது. முதலிரண்டு ஆட்டங்களிலும் இந்திய அணி வெற்றி பெற்று 2-0 என முன்னிலையில் உள்ளது.

இவ்விரு அணிகள் இடையிலான 3-வது ஒரு நாள் போட்டி ஜார்கண்ட் மாநிலம், ராஞ்சியில் இன்று நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 313 ரன்கள் எடுத்தது.

ஆஸ்திரேலிய அணியின் 3வதுதாக களமிறங்கிய மேக்ஸ்வெல், தலா 3 சிக்சர்கள் மற்றும் பவுண்டரிகளை அடித்து இந்திய அணிக்கு மிகவும் அச்சுறுத்தலாக இருந்தார். இவரை எப்படி அவுட்டாக்குவது என இந்திய பந்து வீச்சாளர்கள் திணறி நின்றனர்.

அப்போது போட்டியின் 42 ஓவரின் கடைசி பந்தை எதிர்கொண்ட ஆஸ்திரேலிய வீரர் மார்ஷ் கவர் திசையை நோக்கி பந்தினை அடித்தார். அங்கு பீல்டரிங் நின்ற ஜடேஜா அருமையாக பந்தைத் தடுத்து, பந்தினை விக்கெட் கீப்பர் தோனியிடம் மிக வேகமாக வீசினார். பந்தைப் பிடித்து ஸ்டம்ப் செய்தால் வேகம் குறைந்துவிடும் என்பதால் அதை பிடிக்காமல் டைமிங்ல் ஸ்டம்பின் மீது பந்தினை தட்டிவிட்டார். இதனை எதிர்பாராத ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல் 47 ரன்களில் ஆட்டமிழந்த்து வெளியேறினார். தற்போது இதன் வீடியோ வைரலாகி வருகின்றது. வீடியோ இணைப்பு கீழே..


நண்பர்களுடன் பகிர :