வறட்சியின் பிடியில் ஒரு தீவு: மண்ணை சாப்பிட்டு வாழும் ஆச்சர்யம்...! Description: வறட்சியின் பிடியில் ஒரு தீவு: மண்ணை சாப்பிட்டு வாழும் ஆச்சர்யம்...!

வறட்சியின் பிடியில் ஒரு தீவு: மண்ணை சாப்பிட்டு வாழும் ஆச்சர்யம்...!


வறட்சியின் பிடியில் ஒரு தீவு: மண்ணை சாப்பிட்டு வாழும் ஆச்சர்யம்...!

ஒரு தீவில் நிலவி வரும் கடும் வறட்சியின் காரணமாக மண்ணை உணவாக்கி சாப்பிடும் சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

புட்டுக்கு ஈசன் சிவனே மண் சிவந்ததாக நம்மிடம் புரதானக் கதை உண்டு. இதேபோல் கிருஷ்ண பரமாத்மா ஒருமுறை மண்ணை சாப்பிட்டதாகவும், அவர் அதை வாயைத்திறந்து காட்டிய போது உலகமே அதில் தெரிந்ததாகவும் புராதானக் கதைகள் இங்கு சொல்லப்படுகிறது. பல கோயில்களில் மண் பிரசாதமாகவும் வழங்கப்படுகிறது. நாகர்கோவிலில் உள்ள பிரசித்தி பெற்ற நாகராஜா கோயில், ஏரலில் உள்ள சேர்மன் அருணாச்சல சுவாமி கோயில் ஆகிய கோயில்களில் புற்று மண்ணே பிரசாதமாக வழங்கப்படுகிறது.

ஆனாலும் ஒரு தீவு மக்கள் மண்ணை தான் முக்கிய உணவாக சாப்பிட்டு வருகின்றனர் என்னும் தகவல் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து மேலும் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

ஹைத்தி தீவில் கடந்த சில ஆண்டுகளாகவே கடும் வறட்சி நிலவி வருகிறது. அதனால் எந்த பயிர் விளைச்சலும் இல்லை. மக்களிடம் இறக்குமதியாகும் பேக் செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடவும் காசில்லை. இப்படியான சூழலில் மண்ணை சேறு வடிவில் மாற்றி, அதை ரொட்டி வடிவில் காயவைத்து மாற்றி வருகின்றனர். மண்ணை ரொட்டியாக்கி விற்கவும் செய்கின்றனர். ஒவ்வொரு முறை உணவுப் பஞ்சம் தலைதூக்கும் போதெல்லாம் இந்த தீவு மக்கள் இப்படித்தான் அதை சமாளித்து வருகிறார்களாம்.


நண்பர்களுடன் பகிர :