வந்தாச்சு புதிய 20 ரூபாய் நாணயம்... அதன் சிறப்பம்சங்கள் இதுதான்! Description: வந்தாச்சு புதிய 20 ரூபாய் நாணயம்... அதன் சிறப்பம்சங்கள் இதுதான்!

வந்தாச்சு புதிய 20 ரூபாய் நாணயம்... அதன் சிறப்பம்சங்கள் இதுதான்!


வந்தாச்சு புதிய  20 ரூபாய் நாணயம்...   அதன் சிறப்பம்சங்கள்  இதுதான்!

இந்தியாவில் 20 ரூபாய் நாணயங்கள் மக்கள் பயன்பாட்டுக்கு வர இருக்கிறது. ஏற்கனவே 1, 2, 5, 10 ரூபாய் என வித, விதமான நாணயங்கள் நம் நாட்டில் வழக்கத்தில் இருக்கிறது. இதில் பத்து ரூபாய் நாணயங்கள் செல்லும், செல்லாது என அவ்வப்போது வதந்தி கிளம்புவது வழக்கம்.

இந்நிலையில் புதிதாக 20 ரூபாய் காசு வெளியாக உள்ளது இதை பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய நிதி அமைச்சரும் இணைந்து வெளியிட்டனர். இந்த இருபது ரூபாய் நாணயங்கள் இரு நிறங்களைக் கொண்டு இருக்கும் இதற்கு பன்னிரண்டு கோணங்கள் இருக்கும்.

இந்த நாணயத்தில் நிக்கல் எனும் வெண் வெள்ளி 5 விழுக்காடும், துத்தநாகம் 20 விழுக்காடும், செம்பு 75 விழுக்காடும், வெளிப்பகுதியில் வென் வெள்ளி 20 விழுக்காடும், .துத்தநாகம், செம்பு கலவையாகவும் இருக்கும்.

27 மில்லி மீட்டர் உயரத்தில் உயரத்தில் பத்து ரூபாய் நாணயம் போலவே இருக்கும். ஆனால் இது 10 ரூபாய் நாணயம் போல் வட்டமாக இருக்காது. பழைய ஒருரூபாய் மற்றும் இரண்டு ரூபாய் நாணயங்களில் இருந்ததைப் போல 12 மடிப்பு அதாவது ஓரங்களைக் கொண்டு இருக்கும். பார்வையற்றவர்களும் இது இருபது ரூபாய் காசு என புரிந்து கொள்ள வசதியாகவே பத்து ரூபாய் போன்ற உயரத்திலும், ஒரு ரூபாய் போல் 12 மடிப்பும் இதில் இடம் பெற்றுள்ளது என்கிறார்கள்.


நண்பர்களுடன் பகிர :