நீதிபதியையே அழவைத்த பாசக்கார பையன்.. உருகவைக்கும் தாய்ப் பாசப் பதிவு Description: நீதிபதியையே அழவைத்த பாசக்கார பையன்.. உருகவைக்கும் தாய்ப் பாசப் பதிவு

நீதிபதியையே அழவைத்த பாசக்கார பையன்.. உருகவைக்கும் தாய்ப் பாசப் பதிவு


  நீதிபதியையே அழவைத்த பாசக்கார பையன்..   உருகவைக்கும் தாய்ப் பாசப் பதிவு

அம்மா என்ற உறவுக்கு முன்பு ஈடு சொல்லுவதற்கு எந்த உறவுமே கிடையாது. கருவுற்ற நாளில் இருந்து தனது குழந்தைக்காக புரண்டு கூட படுக்காமல் கண்ண இமை காப்பது போல் காப்பவள் அம்மா. இப்படிப்பட்ட தன் அம்மாவுக்காக ஒரு மகன் செய்ய இருந்த காரியத்தால் நீதிபதியே கண்கலங்கிய சம்பவம் நடந்துள்ளது.

புதுச்சேரியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது தாயாருக்கு சிறுநீரகங்கள் செயல் இழந்தது. டயாலிசிஸ் சிகிட்சைக்கு பின்னரும் அவருக்கு கைகொடுக்காததால் அவருக்கு மாற்று சிறுநீரகத்தை வழங்கினால் தான் இனி உயிர் வாழ்வார் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

நம் இந்தியாவைப் பொறுத்தவரை ஒருவருக்கு கிட்னி தானம் செய்ய வேண்டும் என்றால் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிட்சைக்காக சட்டக் குழுவின் அனுமதியைப் பெற வேண்டும். இப்படியான அனுமதிக்கு செந்தில்குமார் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவின் மீதான விசாரணையின் போது, நீதிபதி ரவிச்சந்திரபாபு முன்பு ஆஜர் ஆன, செந்தில்குமார் தனது தாயாருக்கு சிறுநீரகத்தை தான் தானம் செய்யப் போவதாகவும், அவரது கஷ்டத்தை சகிக்க முடியவில்லை என்றும்,தன் தாயார் சிறுவயதில் இருந்து தன்னை எப்படியெல்லாம் பார்த்துக் கொண்டார் எனவும் அடுக்கினார். இதையெல்லாம் கேட்டு நீதிபதி ரவிசந்திரபாபு அழத் தொடங்கினார். உடனே அவரது விண்ணப்பத்துக்கும் அனுமதி அளித்து சட்டக் குழுவுக்கு பரிந்துரைத்தார்.

நீதிமன்ற வளாகத்தில், நீதிபதி இருக்கையில் இருக்கும் போதே அழுத சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.


நண்பர்களுடன் பகிர :