ஈரோடு மஞ்சளுக்கு கிடைச்சாச்சு புவிசார் குறியூடு.. இனி ஈரோடு மஞ்சளும் உலக மாஸ்தான்! Description: ஈரோடு மஞ்சளுக்கு கிடைச்சாச்சு புவிசார் குறியூடு.. இனி ஈரோடு மஞ்சளும் உலக மாஸ்தான்!

ஈரோடு மஞ்சளுக்கு கிடைச்சாச்சு புவிசார் குறியூடு.. இனி ஈரோடு மஞ்சளும் உலக மாஸ்தான்!


ஈரோடு மஞ்சளுக்கு கிடைச்சாச்சு புவிசார் குறியூடு..  இனி ஈரோடு மஞ்சளும் உலக மாஸ்தான்!

மத்திய அரசு ஒவ்வொரு பகுதிகளில் மட்டுமே பிரத்யேகமாக உள்ள பொருள்களை புவிசார் குறியீடு வழங்கி கொளரவித்து வருகிறது. தமிழகத்திலும் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை உள்பட இப்படி புவிசார் குறீயீடு பெற்ற பல விசயங்கள் உள்ளது.

இந்நிலையில் மத்திய அரசு ஈரோடு மஞ்சளுக்கும் புவிசார் குறியீடு வழங்கியுள்ளது. இதன் மூலம் ஈரோடு மஞ்சளுக்கு நல்ல விலை கிடைப்பதோடு, ஏற்றுமதிக்கும் வாய்ப்பாக அமையும். உணவுப் பொருள்களைப் பொறுத்தவரை தமிழகத்தில் விருப்பாச்சி வாழைப்பழம், சிறுமலை வாழைப்பழம், நீலகிரி தேயிலை ஆகியவற்றுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. பெயர் தான் ஈரோடு மஞ்சள் என்றாலும், இந்த ரகம் கொங்கு மண்டலம் முழுவதும் பரவலாக விளைகிறது.

ஈரோடு மஞ்சளில் கர்குமின் என்னும் வேதிப்பொருள் அதிக அளவில் உள்ளது. இது அதன் முக்கிய சிறப்பாகும். இந்த ரக மஞ்சளுக்கு பிரத்யேக குணங்களும் உண்டு.

நம் இந்தியாவைப் பொறுத்தவரை மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள வைகான் மஞ்சள்,ஒடிசாவில் உள்ள கந்தமால் மலை மஞ்சள் ஆகியவை தனித்தன்மை வாய்ந்தவை. அதேபோல் இனி ஈரோடு மஞ்சளும் உலக அளவில் ஏற்றுமதியாகும்.


நண்பர்களுடன் பகிர :