கடைசி ஓவரை விட ஹிந்தியில் பேசுவது தான் கஷ்டம் - விஜய் சங்கர் : வைரலாகும் வீடியோ Description: கடைசி ஓவரை விட ஹிந்தியில் பேசுவது தான் கஷ்டம் - விஜய் சங்கர் : வைரலாகும் வீடியோ

கடைசி ஓவரை விட ஹிந்தியில் பேசுவது தான் கஷ்டம் - விஜய் சங்கர் : வைரலாகும் வீடியோ


கடைசி ஓவரை விட ஹிந்தியில் பேசுவது தான் கஷ்டம் - விஜய் சங்கர் : வைரலாகும் வீடியோ

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி நாக்பூரில் வைத்து நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் இந்தியா அணி இறுதி ஓவர் வரை சென்று த்ரில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் லாஸ்ட் ஓவரை யார் வீசுவார்கள் என எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் விஜய் ஷங்கர் இறுதி ஓவரினை வீசி இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணிக்கு வெற்றியை தேடி தந்தார். இதற்காக இவரை பாராட்டி இந்திய ரசிகர்கள் ட்விட்டரில் பாராட்டுக்களை தெரிவித்தனர்.

போட்டி முடிவடைந்த பின்பு சஹால் டீவிக்காக விஜய் சங்கரிடம் சஹால் பேட்டி ஒன்றினை எடுத்தார். அதில் உங்களுக்கு கடைசி ஓவர் வீசுவது பிரஷரா அல்லது ஹிந்தி பேசுவது பிரஷரா என கேள்வியை வினாவினார்.

அதற்கு சிரித்திகொண்டே பதில் கூறிய விஜய் சங்கர் ஹிந்தியில் பேசுவது தான் பிரஷர் என நகைச்சுவையாக பதில் கூறினார்.மேலும் கடைசி ஓவர் குறித்து கூறுகையில் நான் தயாராகவே இருந்தேன் நான் என செய்யவேண்டும் என்பதினை யோசித்து கொண்டே இருந்தேன் அதனை செயல்படுத்தினேன் எனவும் கூறினார். வீடியோ இணைப்பு கீழே...


நண்பர்களுடன் பகிர :