இப்படியும் கொண்டாடலாம் பிறந்தநாளை... சரத்குமார் மகளின் சமத்து தனம்..! Description: இப்படியும் கொண்டாடலாம் பிறந்தநாளை... சரத்குமார் மகளின் சமத்து தனம்..!

இப்படியும் கொண்டாடலாம் பிறந்தநாளை... சரத்குமார் மகளின் சமத்து தனம்..!


இப்படியும் கொண்டாடலாம் பிறந்தநாளை... சரத்குமார் மகளின் சமத்து தனம்..!

பார்ட்டி, பிரண்ட்ஸோடு ஊர் சுற்றுதல், டூர் என தங்கள் பிறந்தநாளை வித,விதமாகக் கொண்டாடி சோசியல் மீடியாக்களில் அப்லோட் செய்து லைக்ஸ்களை அள்ளும் பிரபலங்கள் பலரைப் பார்த்திருப்போம். ஆனால் நடிகை வரலெட்சுமி தன் பிறந்தநாளுக்கு செய்த விசயம் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

சரத்குமாரின் மகள் என்னும் அடையாளத்தோடு ‘’போடா போடி’’ படத்தில் நாயகியாக அறிமுகமானவர் வரலெட்சுமி, தன் தேர்ந்த நடிப்பின் மூலமும், கம்பீரமான குரலின் மூலமும் சரத்குமாரின் மகள் என்னும் அடையாளத்தையும் கடந்து அனைவரது மனதிலும் நச்சென்று பதிந்து போனார் வரலெட்சுமி. அதிலும் சமீபத்தில் சர்கார் படத்தில் இவரது நடிப்பு வெகுவாக பேசப்பட்டது.

பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தலை தடுக்கும் விதமாகவும் பெண்ணிய பிரச்னைகளுக்கு உடனுக்கு உடன் தீர்வு காணவும் ‘சேவ் சக்தி’ என்னும் அமைப்பையும் தொடங்கி நடத்தி வருகிறார் வரலெட்சுமி. இந்நிலையில் அவரது 34வது பிறந்தநாள் நேற்று பிறந்தது. இதனை முன்னிட்டு அவரது சேவ் சக்தி அமைப்பைச் சேர்ந்த 25 பேர் தங்கள் உடலை தானம் செய்வதாக அறிவித்துள்ளனர். அதாவது இவர்களது உடலை தங்கள் இறப்புக்கு பின்பு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொடுப்பதே இதன் பெயர்.

வரலெட்சுமியின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிப்பில் உருவாகி வரும் ‘டேனி’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் நேற்று வெளியானது. வரலெட்சுமியின் முயற்சியால் உருவான சேவ் சக்தி அமைப்பின் இந்த முயற்சியை நாமும் பாராட்டலாமே?


நண்பர்களுடன் பகிர :