குழந்தைதனம் மாறாத தோனி...ரசிகரை ஓடவிட்டு விளையாட்டு... இணையத்தில் வைரலாகும் வீடீயோ... Description: குழந்தைதனம் மாறாத தோனி...ரசிகரை ஓடவிட்டு விளையாட்டு... இணையத்தில் வைரலாகும் வீடீயோ...

குழந்தைதனம் மாறாத தோனி...ரசிகரை ஓடவிட்டு விளையாட்டு... இணையத்தில் வைரலாகும் வீடீயோ...


குழந்தைதனம் மாறாத தோனி...ரசிகரை ஓடவிட்டு விளையாட்டு...  இணையத்தில் வைரலாகும் வீடீயோ...

நாக்பூரில் இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ஆஷ்திரேலிய அணியின் வெற்றிக்கு 251 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சொற்ப ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்தனர். இந்த மேட்சில் விராட் கோலி சதம் அடித்தார்.

தோனி ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டம் இழந்தார். இந்த மேட்சில் இந்தியா 49வது ஓவரில் 250 ரன்கள் உடன் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

பேட் செய்து முடித்ததும், இந்தியஅணி பீல்டிங் செய்ய களம் இறங்கினர், கிரவுண்டில் தோனி உள்ளிட்ட சகவீரர்கள் உள்ளே வந்து கொண்டு இருந்தனர். அப்போது தோனியை பார்த்து கைகுலுக்க அவரது ரசிகர் ஒருவர் வந்தார். அவர் தன்னை நோக்கி வருவதைக் கண்டு சின்ன குழந்தைகள் ஓடி விளையாடுவது போல் தோனியும் விளையாட துவங்கினார்.

சரியாக ஒரு நிமிடத்துக்கு இந்த ஓடி விளையாட்டு காட்டிய நிகழ்வு நடந்தது. கடைசியாக ஒரு இடத்தில் நின்று தன் ரசிகரை கட்டித் தழுவினார் தோனி. இந்த வீடீயோ இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வீடீயோ இணைப்பு கீழே கொடுக்கப்பட்டு உள்ளது..


நண்பர்களுடன் பகிர :