ஆரோக்கியமாக இருக்கிறதா உங்க கல்லீரல்? இந்த அறிகுறிகள் இருந்தால் அலட்சியப்படுத்தாதீங்க... Description: ஆரோக்கியமாக இருக்கிறதா உங்க கல்லீரல்? இந்த அறிகுறிகள் இருந்தால் அலட்சியப்படுத்தாதீங்க...

ஆரோக்கியமாக இருக்கிறதா உங்க கல்லீரல்? இந்த அறிகுறிகள் இருந்தால் அலட்சியப்படுத்தாதீங்க...


ஆரோக்கியமாக இருக்கிறதா உங்க கல்லீரல்?   இந்த அறிகுறிகள் இருந்தால் அலட்சியப்படுத்தாதீங்க...

மனித உடல் விலை மதிக்க முடியாதது. நம் உடலுக்குள் இருக்கும் ஒவ்வொரு உறுப்புகளும் ஒவ்வொரு வகையான பணிகளை செய்கிறது. கல்லீரல் கொழுப்பு சத்துள்ள உணவுகளை செரிக்க வைக்கும் பித்தநீரை உற்பத்தி செய்கிறது.

ஹைபடைடிஸ் சி என்பது ஒரு கல்லீரல் நோய். இது ஹைபடைடிஸ் சி எனும் வைரஸால் ஏற்படுகிறது. ஆரம்பத்தில் இது எவ்வித அறிகுறியும் கொண்டு இருக்காது. இந்த நோய் வந்தவருக்கு பசியே இருக்காது. இந்த பசியின்மை ‘அனோரெக்ஸியா’ என அழைக்கப்படுகிறது. அப்படியே இது தீவிரமடைந்து வாந்தி, குமட்டல் வரும். அதில் இருந்து சில வாரங்கள் கழித்து மூட்டுகள், தசைகளில் வலி ஏற்படும்.

இவ்விரு அறிகுறிகளும் தென்பட்டால் உடனே மருத்துவரைப் போய் பார்த்துவிட வேண்டும். அடிக்கடி சோர்வு ஏற்படும். சோர்வு விடாப்பிடியாக ஒட்டிக்கொண்டே இருக்கும். ஹைபடைடிஸ் தொற்று இருந்தால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவும் குறையத் தொடங்கிவிடும். இதனோடு தலைவலியும் இருந்தால் உடனே மருத்துவரைப் போய் பார்க்க வேண்டும்.

இதேபோல் கல்லீரல் பாதிக்கப்பட்டவர்களுக்கு ‘இன்ஸோமினியா’ ஏற்படும். இரவில் தூங்க முடியாது. இரவில் அடிக்கடி விழித்துக் கொள்வதும் இந்நோயால் நடக்கும்.

கல்லீரல் அலற்சி ஏற்பட்டால் ‘பிலிரூபின்’ என்னும் வேதிப்பொருள் ரத்தத்தில் கலந்துவிடும். இதனால் உடலில் நச்சுகள் உருவாகி சருமம் மஞ்சள் நிறத்தில் மாறிவிடும். கண்களிலும் உள்ள வெள்ளைப் பகுதி மஞ்சள் நிறமாகிவிடும். இந்த அறிகுறிகள் தென்பட்டால் உடனே தகுந்த மருத்துவரைப் போய் பார்ப்பது நல்லது. உங்கள் கல்லீரல் பாதுகாப்பில் தான் உங்கள் மொத்த ஆரோக்கியமும் இருக்கிறது.”என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.


நண்பர்களுடன் பகிர :