உடலுக்கு பல ஆரோக்கியங்களையும் கொடுக்கும் செவ்வாழை... தினசரி ஒன்னு சாப்பிட்டாலே போதும்..! Description: உடலுக்கு பல ஆரோக்கியங்களையும் கொடுக்கும் செவ்வாழை... தினசரி ஒன்னு சாப்பிட்டாலே போதும்..!

உடலுக்கு பல ஆரோக்கியங்களையும் கொடுக்கும் செவ்வாழை... தினசரி ஒன்னு சாப்பிட்டாலே போதும்..!


உடலுக்கு பல ஆரோக்கியங்களையும்  கொடுக்கும் செவ்வாழை...  தினசரி ஒன்னு சாப்பிட்டாலே போதும்..!

பழங்கள் பொதுவாகவே உடலுக்கு மிகவும் நல்லது.அதிலும் மலச்சிக்கலைத் தீர்ப்பதில் பழங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அதிலும் வாழைப் பழம் பெரிய விலை இன்றி எளிய மக்களும் வாங்கி சாப்பிடக் கூடியது. இந்த வாழைப் பழத்திலும் செவ்வாழை சாப்பிடுவது நம் உடலுக்கு ஏராளமான பயன்களைக் கொடுக்கும்.

இதுகுறித்து தெரிந்துகொள்ள மேலே படியுங்கள். செவ்வாழைப் பழத்தில் வைட்டமின் சி சத்தி அதிக அளவில் உள்ளது. அதே போல் செவ்வாழையில் பீட்டா கரோட்டின் அதிக அளவில் உள்ளது. இது நம் வயிற்றுக்குள் சென்றதும் வைட்டமின் ஏ சத்தாக மாறி நம் கண்களைப் பாதுகாக்கும்.

செவ்வாழைப் பழம் மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். சிறுநீரகக் கற்கள் உருவாவதையும் தடுக்கும். இதயநோய், புற்றுநோய் ஆகியவை வராமல் தடுப்பதிலும் செவ்வாழைக்கு முக்கியப்பங்கு உண்டு. நீரிழிவு நோயாளிகளும் கூட செவ்வாழைப் பழத்தை அளவோடு சாப்பிடலாம். செவ்வாழை எலும்புகள் உறுதியோடு இருக்கவும் உதவும்.

பலரும் உடல் குறைப்பில் ஈடுபடும் போது கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள சோறு உள்ளிட்ட உணவுகளைத் தவிர்த்துவிட்டு அதிக அளவிலான பழ உணவுகளை எடுத்துக் கொள்வார்கள். அவர்களுக்கும் செவ்வாழைப் பழம் மிகவும் நல்லது. செவ்வாழையில் குறைந்த அளவு கலோரிகள் உள்ளது. இதனால் உடல் எடை குறையும் என்பதோடு நீண்ட நேரம் பசி எடுக்காமலும் இருக்கும்.

தொடர்ச்சியாய் செவ்வாழை சாப்பிட்டு வருபவர்களுக்கு இரத்த அணுக்களின் அளவு சீராகும். உடலுக்கு சுறுசுறுப்பும் கிடைக்கும். நெஞ்சரிச்சல் உள்ளவர்கள் தொடர்ந்து செவ்வாழை சாப்பிட்டு வந்தால் குணமாகும். காரணம் செவ்வாழையில் உள்ள ஆண்டாசிட் இதை செய்கிறது. செவ்வாழையில் அதிக அளவில் ஆண்டி ஆக்ஸிடண்ட்கள் உள்ளது. தொடர்ந்து செவ்வாழை சாப்பிட்டு வந்தால் கண்பார்வை தெளிவாகும். மாலைக்கண் நோயும் குணமடையும்.

இனி தினசரி காலையில் ஒரு செவ்வாழை சாப்பிட மறக்காதீங்க...


நண்பர்களுடன் பகிர :