ஒரே ஒரு பாட்டி மட்டும் வசிக்கும் நகரம்.. 84 வயதிலும் மேயராக தனிமையில் ஊரைக்காக்கும் பாட்டி..! Description: ஒரே ஒரு பாட்டி மட்டும் வசிக்கும் நகரம்.. 84 வயதிலும் மேயராக தனிமையில் ஊரைக்காக்கும் பாட்டி..!

ஒரே ஒரு பாட்டி மட்டும் வசிக்கும் நகரம்.. 84 வயதிலும் மேயராக தனிமையில் ஊரைக்காக்கும் பாட்டி..!


 ஒரே ஒரு பாட்டி மட்டும் வசிக்கும் நகரம்.. 84 வயதிலும் மேயராக தனிமையில் ஊரைக்காக்கும் பாட்டி..!

நல்லது, கெட்டதுன்னா நான்கு பேர் வேண்டும் என்று சொல்வார்கள். அப்பட்சி வீட்டில் மட்டுமல்ல, ஊரிலேயே கூட நான்கு பேர் இல்லாமல் தனிமையில் வாழ்கிறார் ஒரு பாட்டி. 84 வயதான அவர் மட்டுமே வசிக்கும் ஊருக்கு அவரை மேயராகவும் நியமித்துள்ளது அரசு.

அமெரிக்க நாட்டில் நப்ராச்கா என்னும் பகுதியில் மோனோவி என்னும் சின்ன நகர் இருக்கிறது. இந்த ஊரில் எல்சி எய்லர் என்னும் 84 வயது மூதாட்டி வசித்து வருகிறார். இந்த ஊரில் இவர் மட்டுமே வசித்து வருகிறார் என்பது தான் அதில் ஆச்சர்யமான விசயம். இந்த நகரில் குடியிருந்தவர்கள் எல்லாம் ஊர் வளர்ச்சி அடையவில்லை என தொழில், படிப்பு, வேலைவாய்ப்பு என பல காரணங்களுக்காக இடம் பெயர்ந்து சென்று விட்டனர்.

எல்சிக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இவர்களும் ஊராரைப் போல இடம் பெயர்ந்த போது எல்சி எய்லர் தான் வரவில்லை என பிடிவாதமாக மறுத்து அதே ஊரில் இருந்து விட்டார்.

1971ல் எல்லாம் இந்த ஊரில் இடம்பெயர்தல் தொடங்கி இருந்தது. அப்போது தேநீர், அத்யாவசிய பொருள்கள் விற்கும் கடை ஒன்றை இங்கு எல்சி தொடங்கி இருந்தார். அப்போதே வியாபாரம் இல்லாமல் கடையை மூட வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த கடையை ஒட்டியிருந்த அஞ்சலகமும் மூடப்பட்டது.

ஆனாலும் மனம் தளராமல் டீக்கடை போட்டார் எல்சி. ஆளே இல்லாத கடையில் யாருக்குடா டீ ஆத்துற? என விவேக் ஒரு படத்தி, கேட்கும் காமெடி காட்சி போல, எல்சி திறந்த டீக்கடையில் அந்த ஊரை தாண்டிச் செல்லும் நெடுஞ்சாலை வாகன ஓட்டிகள் டீ குடிக்க ஒதுங்கினர். இப்போது அந்த கடையில் ஓரளவு கூட்டம் வருகிறது. இரவில் அந்த ஊரில் ஒற்றை ஆளாக தன் வீட்டில் இருப்பார் எல்சி.

முக்கியமான விசயம் எல்சி அங்கிருந்து இடம் பெயராமல் இருப்பதற்கு அங்கு இருக்கும் அழகான இயற்கை எழில் சூழலே காரணம். தற்போது அமெரிக்க அரசு, இவரை அந்த ஊரின் மேயராகவும் அறிவித்துள்ளது. ஊரில் ஆள்களே இல்லாததால் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இந்த 84 வயது கெத்து பாட்டிக்கு லைக்ஸை தட்டலாமே...


நண்பர்களுடன் பகிர :