உயிரையே காப்பாற்றிய கவிதை... ஒரு கைதியின் வாழ்வில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்..! Description: உயிரையே காப்பாற்றிய கவிதை... ஒரு கைதியின் வாழ்வில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்..!

உயிரையே காப்பாற்றிய கவிதை... ஒரு கைதியின் வாழ்வில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்..!


உயிரையே காப்பாற்றிய கவிதை...  ஒரு கைதியின் வாழ்வில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்..!

அழகுப் பதுமைக்கு மயங்காதவர்கள் கூட நல்ல கவிதைக்கு மயங்குவார்கள் என்பார்கள். கவிதை மிகச்சிறந்த விசயங்களில் ஒன்று. மகாகவி பாரதியாரையும், கவிமணியையும் இன்றும் நாம் நினைவில் கொள்ள அவர்களது கவித்திறமே காரணம்.

இப்படித்தான் தான் எழுதிய ஒரு கவிதைத் தொகுப்பால் ஒரு கைதிக்கு அவரது உயிரே பரிசாகக் கிடைத்துள்ளது. இதுகுறித்து மேலும் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

தியானேஷ்வர் சுரேஷ்பார்கர் என்பவர் மகாராஷ்டிரா மாநிலம், புனே நகரில் குழந்தையை கொலை செய்ததற்காக கைது செய்யப்பட்டு இருந்தார். இவருக்கு கடந்த 2006ம் ஆண்டு மரணதண்டனை விதிக்கப்பட்டது. இவர் இதுவரை மொத்தம் 18 ஆண்டுகள் சிறையில் இருந்துள்ளார். இந்நிலையில் தான் அவரது மரண தண்டனையை ரத்து செய்யக்கோரி அவரது வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், ‘’தியானேஷ்வர் சுரேச்க் பார்கர் இப்போது சிறந்த மனிதராகிவிட்டார். அவர் கவிதைகளும் எழுதி இருக்கிறார். அவற்றை படிக்கையிலேயே அவர் மனம் திருந்தி இருப்பதை உணர முடிகிறது. எனவே அவருக்கு விதித்த மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க வேண்டும்.”என்றார்.

இதன் பின்னர் உச்சநீதிமன்ற நீதிபதிகள், ஏ.கே.சிக்ரி, எஸ்.அப்துல் நஸீர், எம்.ஆர்.ஷா ஆகியோர் கொண்ட அமர்வு, ‘’அவரது கவிதைகளில் இருந்து அவர் மனம் திருந்தி விட்டார் என அறிய முடிகிறது. எனவே அவரது மரண தண்டனையை, ஆயுள் தண்டனையாக குறைக்கிறோம்.”என தீர்ப்பளித்தனர்.


நண்பர்களுடன் பகிர :