மனிதம் சுமக்கும் மனிதர்: இவரை பாராட்டாமல் இருக்க முடியாது... பிச்சைக்காரரோடு சேர்ந்து சாப்பிட்ட டிப்டாப் மனிதர்..! Description: மனிதம் சுமக்கும் மனிதர்: இவரை பாராட்டாமல் இருக்க முடியாது... பிச்சைக்காரரோடு சேர்ந்து சாப்பிட்ட டிப்டாப் மனிதர்..!

மனிதம் சுமக்கும் மனிதர்: இவரை பாராட்டாமல் இருக்க முடியாது... பிச்சைக்காரரோடு சேர்ந்து சாப்பிட்ட டிப்டாப் மனிதர்..!


மனிதம் சுமக்கும் மனிதர்: இவரை பாராட்டாமல் இருக்க முடியாது... பிச்சைக்காரரோடு சேர்ந்து சாப்பிட்ட டிப்டாப் மனிதர்..!

உலகமே இன்று பரபரப்பு சூழலுக்குள் சிக்கிக் கொண்டு இருக்கிறது. வேலை, சம்பளம், டார்கெட் என ஓடும் சூழலுக்குள் நாம் சிக்கிக் கொண்டு வெகுகாலம் ஆகிவிட்டது. இந்த சூழலிலும் அன்பை சுமக்கும் ஒரு மனிதர் குறித்த பதிவு முகநூலில் வைரல் ஆகிவருகிறது.

விருத்தோம்பல் தான் தமிழர் பண்பாட்டின் அடிப்படை. தான் உணவு சாப்பிடும் முன்பு வீட்டு வாசலில் உணவு வேண்டி யாரேனும் காத்திருக்கிறார்களா? என பார்த்து விட்டு அதன் பின்னர் சாப்பிட்ட பாரம்பர்யம் தமிழர்களுக்குச் சொந்தமானது என சங்க இலக்கியங்களின் வழியாக அறிய முடிகிறது. அப்படியான ஒரு மனிதரின் நிஜத்தில் நடந்தது தான் இது!

ஜீன்ஸ் பேண்ட், டீசர்ட், கையில் கோல்டு பிரேம் வாட்ச் சகிதம் டிப்டாப்பாக இருந்த ஒருவர் ரயில்வே ஸ்டேனில் வந்து இறங்கினார். அவருக்கு அடுத்த ரயிலை பிடிக்க வேண்டும்.

அதனிடையில் ரயில் பிளாட்பார படியில் ஏறி அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தார். கடையில் சாப்பிட்டால் அவர் உடம்பு கெட்டுவிடக் கூடும் என தன் பாசக் கணவனுக்கு அவரது மனைவி வீட்டில் இருந்தே சாப்பாட்டை பார்சல் கட்டி அனுப்பி இருந்தார்.

அந்த சாப்பாட்டைத் தான் அவர் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்குவந்த பிச்சைக்காரர் ஒருவர் பசிக்குது என தன் கையை நீட்டினார். அவருக்கு பார்சலை பிரித்துக் கொடுக்க முடியாது. உடனே ஒரு நொடி கூட தாமதிக்காமல் தன்னோடு அமரச்சொல்லி சாப்பாட்டை அவரையும் சாப்பிடச் சொன்னார். ஒரே பார்சல் சாப்பாட்டில் இப்போது டிப்டாப் ஆசாமியும், பிச்சைக்காரர் தோற்றத்தில் இருந்தவரும் சேர்ந்தே சாப்பிட்டார்கள். எவ்வளவு மனிதத்துவமான விசயம் இது?

அது தொடர்பான புகைப்படமும் சோசியல் மீடீயாக்களில் வைரலாகி வருகிறது.


நண்பர்களுடன் பகிர :