கஸ்தூரியால் டென்ஷனான நடிகர் கார்த்திக்!... கஸ்தூரிக்கு குட்டு கொடுத்து அதிரடி பேச்சால் பரபரப்பு..! Description: கஸ்தூரியால் டென்ஷனான நடிகர் கார்த்திக்!... கஸ்தூரிக்கு குட்டு கொடுத்து அதிரடி பேச்சால் பரபரப்பு..!

கஸ்தூரியால் டென்ஷனான நடிகர் கார்த்திக்!... கஸ்தூரிக்கு குட்டு கொடுத்து அதிரடி பேச்சால் பரபரப்பு..!


கஸ்தூரியால் டென்ஷனான நடிகர் கார்த்திக்!... கஸ்தூரிக்கு குட்டு கொடுத்து அதிரடி பேச்சால் பரபரப்பு..!

நடிகை கஸ்தூரியை நடிகர் கார்த்திக் கிழித்து தொங்கவிட்ட சம்பவம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கிய நடிகை கஸ்தூரி நடிகர் கார்த்திக்கை பேச வருமாறு அழைத்தார். அப்போது அவர் மேடைக்கு வந்த உடன் உங்களுடன் ஒரு செல்பி எடுத்துக் கொள்கிறேன். உங்க அப்பா இல்லைலா..எனக் கேட்க, மரியாதையே இல்லாம போயிடுச்சுல்ல...செல்பிங்குற விசயத்தை வைச்சுகிட்டு யாருக்குமே ரெஸ்பான்ஸ் இல்லாம போயிடுச்சு. கேமராவில் முன்னாடி ஒரு பிளாஸ், பின்னாடி ஒரு பிளாஸ்...இவ்வளவு வெளிச்சம் பட்டா ‘மைக்ரேன்’ இருக்குறவன் என்ன ஆவான்?

போட்டோ எடுக்குறேன்னு மரியாதையா கேட்டு எடுக்குறேன்னு சொல்ல முடியாத அளவுக்கு நாம விவெஸ்தையே இல்லாமச் போயிட்டோம்ன்னு வருத்தமா இருக்கு. இப்போ சொன்னாதானா சொல்ல முடியும். வேற எப்பையும் சொல்ல முடியாது.”என்றதும், உடனே தொகுப்பாளரான நடிகை கஸ்தூரி, கார்த்தி நான் செல்பி எடுத்தது ஜஸ்ட் ஸ்டாண்டர்ப் காமெடிக்காத் தான். “என்று சொல்லி விட்டு மைக்கை பார்த்து பேசத் துவங்குகிறார்.

‘’யெஸ் கார்த்தி உண்மையிலேயே உங்களோடு எனக்கு ஒரு போட்டோ கூட இல்லை. லேடீஸை விட, ஜெண்ட்ஸ்க்கு வெளியே போகும்போது இந்த செல்பி பிரச்னை அதிகம். வெளியே போகும் போது எந்த பிரைவேட் மூவ்மெண்டாக இருந்தாலும் யாரும் கவலைப்படுவதே கிடையாது. அவுங்க தான் உண்டு...தன் போன் உண்டுன்னு, அது ஒரு பிரைவசி என்றே தெரியாமல் செய்கின்றனர். அவர், அவர்களே பாட்டுப்பாடி, டான்ஸ் ஆடி டிக்டாக்கில் பாத்ரூமில் செய்ய வேண்டியதைக் கூட செய்து பேசுகின்றனர்.

பத்திரிக்கையாளர்கள் தினம் விஜபிக்களை சந்திக்கின்றனர். பேசுகின்றனர். அதனால் அவர்களுக்கு விஜபி களுடனான எல்லைக்கோடு தெரியும். ஆனால் சாதாரண மக்களுக்கு அது தெரிவதில்லை. இன்று போன் இருந்தால் எது வேண்டுமானாலும் செய்யலாம் என்பது வருந்தத்தக்க டிரெண்டிங் ஆகிவிட்டது. அதுல எல்லாரும் மனிதர்கள் தான். ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு வகையில் ரியாக்ட் செய்வார்கள். கார்த்திக் சார் இப்போது காட்டமாக சொன்னார்.

தமிழ் சினிமா ரசிகர்களைப் போல் பண்பான ரசிகர்கள் கண்டிப்பாக இந்தியாவில் வேறு எங்கும் பார்க்க முடியாது. ஆனால் செல்பி விசயத்தில் எல்லாரும் கொஞ்சம் இடைவெளி விட்டு இருக்க வேண்டும்.”என பேசி சமாளித்தார்.

வீடீயோ இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


நண்பர்களுடன் பகிர :