உடலுக்கு பல பலன்களை கொட்டிக் கொடுக்கும் கற்றாழை... கெட்ட கொலஸ்டிராலை விரட்டி இதயத்தை காக்கும்..! Description: உடலுக்கு பல பலன்களை கொட்டிக் கொடுக்கும் கற்றாழை... கெட்ட கொலஸ்டிராலை விரட்டி இதயத்தை காக்கும்..!

உடலுக்கு பல பலன்களை கொட்டிக் கொடுக்கும் கற்றாழை... கெட்ட கொலஸ்டிராலை விரட்டி இதயத்தை காக்கும்..!


உடலுக்கு பல  பலன்களை கொட்டிக் கொடுக்கும் கற்றாழை...   கெட்ட கொலஸ்டிராலை விரட்டி இதயத்தை காக்கும்..!

கற்றாழை நம் அனைவருக்கும் தெரிந்த தாவரம் தான். அனைத்து பகுதிகளிலும் வளரக்கூடிய கற்றாழை சாதாரண தொட்டியில் வைத்தாலும் அழகாக வளரும். இந்த காற்றாலைக்கு ஏராளமான மருத்துவ குணங்களும் உண்டு.

இது இரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவை அதிகரிக்கும். இதனால் இதயத்துக்கு தூய்மையான இரத்தம் கிடைக்கும். இது இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைப்பதால் நம் இதயமும் ஆரோக்கியமாகத் துடிக்கும். கற்றாழையில் ஆண்டி வைரல், பூஞ்சை எதிர்ப்பு பொருள், அழற்சி எதிர்ப்பு பொருள் என பல நன்மை செய்யும் பொருள்கள் இருக்கின்றன. இது நம் உடலில் உள்ள நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தி உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி உடலையும் ஜிம்மென்று ஆக்கும்.

கற்றாழையை ஜீஸ் போட்டு குடித்து வந்தால் நம் பல் இடுக்குகளில் படிந்திருக்கும் நீண்டகால கரை, அழுக்குகள், வாய்துர்நாற்ற்ச், ஆகியவை மறையும். குடல் புண்ணுக்கும் கற்றாழை சாறு நல்ல ஒரு மருந்து.

இதேபோல் நம் உடலுக்கு கேடு செய்யும் தீமை செய்யும் கெட்ட கொலஸ்டிராலை கற்றாழை கரைக்கும். இது உடலின் மெட்டபாலிசம் மற்றும் ஜீரணசக்தியை அதிகரிக்கும். உடல் எடையையும் கட்டுக்குள் வைக்கும். கற்றாழை சாறை தினமும் குடித்து வந்தால் நம் உடலை சுற்றுப்புற சூழலுக்கு ஏற்ப மாற்றும். தாங்கும் வல்லமையும் தரும்.

கற்றாழை மிக முக்கியமாக நம் உடலில் நோய் எதிர்ப்புத்தன்மையை அதிகரிக்கிறது. காரணம் கற்றாழை ஜெல்லில் இரத்த வெள்ளை உயிரணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும் தன்மை உண்டு. இது நம் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும்.

கற்றாழை ஜெல்லில் கால்சியம், மக்னீசியம், செலினியம், காப்பர் போன்ற தாதுக்கள் உள்ளது. இது நம் உடலில் மெட்டபாலிசத்தை அதிகரித்து உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. கற்றாழை கீழ்வாத நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. இதிலுள்ள அமினோ அமிலமான பிராடிகைனாஸ் மூட்டுகளில் ஏற்படும் அலற்சியை சரி செய்யும். இதில் உள்ள சாலிசைலிக் அமிலம் மூட்டுகளில் அழற்சி உருவாகாமல் காக்கும்.

இனி உங்க வீட்டில் எந்த செடி இருக்கிறதோ இல்லையோ கற்றாழை செடி இருக்கட்டும்..


நண்பர்களுடன் பகிர :