பேருந்தில் தவித்த பெரியவர்: உதவிக்கரம் நீட்டிய இளம்பெண்.. சமூகவலைதளங்களை உருகவைக்கும் இளம்பெண்ணின் எழுத்து..! Description: பேருந்தில் தவித்த பெரியவர்: உதவிக்கரம் நீட்டிய இளம்பெண்.. சமூகவலைதளங்களை உருகவைக்கும் இளம்பெண்ணின் எழுத்து..!

பேருந்தில் தவித்த பெரியவர்: உதவிக்கரம் நீட்டிய இளம்பெண்.. சமூகவலைதளங்களை உருகவைக்கும் இளம்பெண்ணின் எழுத்து..!


  பேருந்தில் தவித்த பெரியவர்: உதவிக்கரம் நீட்டிய இளம்பெண்..   சமூகவலைதளங்களை உருகவைக்கும் இளம்பெண்ணின் எழுத்து..!

குறிப்பு: சுவாரஸ்யம் கருதி இலங்கை மொழியில் இருந்த இப்பதிவு முழுக்க தமிழாக்கம் செய்யப்பட்டு உள்ளது)

இது ஒரு இளம் பெண்ணின் முகநூல் பதிவு. சமூக வலைதளங்களில் இன்று இதுதான் டிரெண்டிங். ‘’நான் யாழ்ப்பாணம் பகுதியில் இருக்கும் குடும்பம் ஒன்றுக்கு உதவி வழங்க சென்று இருந்தேன். அங்கிருந்து கிளிநொச்சி செல்ல வவுனியா பேருந்தில் ஏறினேன். பேருந்து புறப்பட்டது. கண்டக்டர் டிக்கெட் எடுக்கத் துவங்கினார்.

என் முன் சீட்டில் ஒரு பெரியவர் ஒருந்தாட்ர். அவர் தனக்கு வவுனியா செல்ல வேண்டும். ஆனால் என்னிடம் 20 ரூபாய் தான் இருக்கிறது என்று சில்லறைகளைக் கொடுத்தார். வவுனியா செல்ல 230 ரூபாய் ஆகும். கண்டக்டர் அவரைத் திட்டினார். நோயாளியாகவும் இருந்த அந்த பெரியவ்ரை அவர் திட்டினார். அவர் கனத்த மனதோடு எழுந்தார். நான் அவருக்கு டிக்கெட் எடுக்கிறேன் அப்பா என சமாதானம் செய்து டிக்கெட் எடுத்தேன்.

பேருந்தில் ஏராளமானோர் இருந்தும் அவருக்கு உதவ முன்வரவில்லை. சிறுதுநேரத்தில் அவர் அருகிலேயே ஒரு இடம் கிடந்தது. நான் அதில் போய் அமர்ந்துகொண்டேன். அவர் வெள்ளை சட்டை, வெள்ளை அணிந்திருந்தார். அவருக்கு எந்த கெட்டப்பழக்கமும் இல்லை என பார்த்த மாத்திரத்திலேயே தெரிந்தது. நான் அவரிடம் பேசத் துவங்கினேன். அவர் யாழ்ப்பாணம் மருத்துவமனைக்கு செல்வதாகக் கூறினார்.

பிள்ளைகள் இல்லையா? என்றேன். கொழும்பில் இருப்பதாக சொன்னார். நான் பேரப்பிள்ளை ஒருவரின் வீட்டில் உள்ளேன். மனைவியும் இல்லை. என்றார். எனக்கு அவர் சுற்றம் இருந்தும் தனிமையில் வாழ்வது புரிந்தது. நான் அவருக்கு உதவி செய்ய அவரது முகவரி கேட்டேன். ‘’வில்லிபுனம், பூந்தோட்டம், வவுனியா என்றவரால் மேற்கொண்டு சொல்ல முடியவில்லை. அப்போது தான் அவர் சிறிது மனநோயாலும் பாதிக்கப்பட்டு இருப்பதைப் பார்த்தேன். எனது அலைபேசியை அவருக்கு எழுதிக்கொடுத்து வீட்டுக்கு போனதும் யாரிடமாவது கொடுத்து கால் பண்ணுங்க என்றேன். என் கையில் இருந்த சிறிது பணத்தையும் கொடுத்தேன்.”என்று தன் பதிவில் போட்ட அந்த இளம் பெண் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பசி மிகவும் கொடுமையானது. வயதான உங்கள் பெற்றோரை இப்படி விடாதீர்கள். இப்படி வயதானவர்கள் யாரையும் நீங்கள் பார்த்தால் அவர்களுக்கு உதவவும் செய்யுங்கள் என்று உருகியுள்ளார்.


நண்பர்களுடன் பகிர :