30 வயது தாண்டிவிட்டதா? நீங்கள் மாற வேண்டிய நேரம் இது! Description: 30 வயது தாண்டிவிட்டதா? நீங்கள் மாற வேண்டிய நேரம் இது!

30 வயது தாண்டிவிட்டதா? நீங்கள் மாற வேண்டிய நேரம் இது!


30 வயது தாண்டிவிட்டதா? நீங்கள் மாற வேண்டிய நேரம் இது!

மனித உடலின் மொத்த ஆரோக்கியமே நாம் உண்ணும் உணவிலும், நமது ஆரோக்கியமான உணவு பழக்கவழக்கத்திலும் தான் இருக்கிறது. 30 வயதுக்கு உட்பட்ட பருவத்தில் கல்லைப் போட்டாலும் கரைந்துவிடும் என முன்னோர்கள் சொல்வதைப் போல நம் உடலும், இயக்க உறுப்புகளும் பணி செய்யும். ஆனால் முப்பதை தொட்டுவிட்டால் ரொம்பவே உஷாராக இருக்க வேண்டும்.

புகை நமக்கு பகை...மது உடலுக்கு கேடு

முப்பதை தொட்டவர்கள் மது, புகை பழக்கத்தை படிப்படியாகக் குறைத்து அறவே விட்டுவிட வேண்டும். ,மது, புகை என்று மட்டும் அல்ல...கொழுப்புச்சத்து அதிகமாக இருக்கக்கூடிய நொறுக்குத்தீனிகள், பிஸ்கட்களுக்கும் குட்பை சொல்லிவிடுவது நல்லது. ஆண்டொன்று போனால் வயதொன்று கூடும். இதனால் நம் உடலிலும் நோய் எதிர்ப்பு சக்தி குறையும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

30 வயதைத் தொட்டவர்களுக்கு உடல் பயிற்சி மிக, மிக அவசியம். அதற்கென்று ஜிம்முக்கு போக வேண்டும், சிஸ் பேக் வைக்க வேண்டும் என்று அர்த்தம் இல்லை. அதற்கு நேரமும், ஆர்வமும் இருப்பவர்கள் செய்யலாம். மற்றவர்கள் தினசரி காலை, மாலை நேரத்தில் சராசரியாக முப்பது ம்ஜுதல் 40 நிமிடங்கள் வரை நடந்தாலே போதும்.

அதேபோல் நல்ல நட்புகள், ஆத்மார்த்தமான உறவுகள் ஆகியவையும் முக்கியம். நம் அடர்த்தியான வேலைப்பழுவில் இருந்து நமக்கு இளைப்பாறுதல் தரும் விசயமே உறவுகள் தான் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இதேபோல் ஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழ சராசரியாக எட்டு மணி நேரம் நாள் ஒன்றுக்கு தூங்க வேண்டும். இதனால் நன்றாக தூங்க பழக்கப்படுத்திக் கொள்வதும், பல்லின் ஆரோக்கியத்தை பேணுவதும் இந்த வயதில் மிக அவசியம். இதையெல்லாம் விட இப்போதெல்லாம் மிகவும் குறைவான கட்டணத்திலேயே, மொத்த குடும்பப் பாதுகாப்புக்கு பல இன்சூரன்ஸ் நிறுவனங்கள் காப்பீடு வழங்குகிறது. முப்பதை நாம் தாண்டுகிறோம் என்றால் நம் பெற்றோர்கள் 60 வயதை தாண்டி இருப்பார்கள். அதனால் நாம் இந்த வயதில் செய்து கொள்ளும் குடும்ப மருத்துவக் காப்பீடு அவர்களுக்கு மிக உதவியாக இருக்கும்.

முப்பதை தாண்டியவர்களே...இதையெல்லாம் முயற்சிப்பீர்கள் தானே?


நண்பர்களுடன் பகிர :