பரவை முனியம்மாவின் உருகவைக்கும் மறுபக்கம்.. தன் இறப்புக்குபின் உதவித்தொகை குறித்தும் உருக்கம்..! Description: பரவை முனியம்மாவின் உருகவைக்கும் மறுபக்கம்.. தன் இறப்புக்குபின் உதவித்தொகை குறித்தும் உருக்கம்..!

பரவை முனியம்மாவின் உருகவைக்கும் மறுபக்கம்.. தன் இறப்புக்குபின் உதவித்தொகை குறித்தும் உருக்கம்..!


பரவை முனியம்மாவின் உருகவைக்கும் மறுபக்கம்..   தன் இறப்புக்குபின் உதவித்தொகை குறித்தும் உருக்கம்..!

சிங்கம் போல நடந்து வர்றான் செல்லப் பேராண்டி.. என தூள் படத்தில் தன் கணீர் குரலால் பட்டி,தொட்டியெங்கும் வைரல் ஆனவர் பரவை முனியம்மா. நகைச்சுவை நடிகர் விவேக் கூட்டணியோடு மேலும் சில படங்களில் தலைகாட்டினார். அதிலும் விவேக், பரவை முனியம்மா கூட்டணியில் ‘மைனர் குஞ்சு காமெடி செம ஹிட்டானது.

திரையில் பார்வையாளர்களை அவ்வளவு சிரிக்க வைக்கும் பரவை முனியம்மாவின் நிஜவாழ்க்கை உண்மையில் சோகம் நிரம்பியது. அண்மையில் கலைமாமணி விருது கிடைத்த கையோடு, அரசுக்கு ஒரு கோரிக்கையும் வைத்தார் பரவை முனியம்மா. அதன் பின்னர் தான் அவரது ஏழ்மை நிலை பலருக்கும் தெரிந்தது.

பரவை முனியம்மாவுக்கு ஆறு பிள்ளைகள் உள்ளனர். உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, வறுமையிலும் வாடி வந்த பரவை முனியம்மாவுக்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 6 லட்ச ரூபாய் நிதி உதவியை வைப்புத்தொகையாக வழங்கினார். இதன் மூலம் மாதம் 6000 ரூபாய் பரவை முனியம்மாவுக்கு கிடைத்து வருகிறது.

பரவை முனியம்மாவின் கணவர் இறந்து மூன்று ஆண்டுகள் ஆகிறது. அவர் தற்போது அவரது 6வது மகனோடு வாழ்ந்து வருகிறார். இந்த 6வது மகன் மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி ஆவார். இப்படிச் சோகம் ததும்பிய அவரது வாழ்வில் கலைமாமணி விருது இளைப்பாறுதல் தந்துள்ளது. அந்த மகிழ்ச்சியை பகிர்வார் என்ற எதிர்பார்ப்பில் அவரது வீட்டுக்கு ஊடகத்தினர் சென்றனர்.

அப்போது பரவை முனியம்மா, ‘’கலைமாமணி விருது கிடைத்ததில் மகிழ்ச்சி. எனது இறப்புக்கு பின்னர் இப்போது எனக்கு வழங்கி வரும் 6000 ரூபாய் உதவித் தொகையை எனது மூளை வளர்ச்சி குன்றிய மகனுக்கு அரசு வழங்க வேண்டும். அது அம்மா எம்.ஜி.ஆர் அறக்கட்டளை மூலம் வழங்க ஆணையிட்டு இன்று வரை வந்து கொண்டிருக்கிறது.”என உருகியுள்ளார்.


நண்பர்களுடன் பகிர :