இறந்த மனிதரை உயிர்ப்பித்தாரா மத போதகர்.!! : உலகளவில் வைரலாகும் காணொளி இதோ.. Description: இறந்த மனிதரை உயிர்ப்பித்தாரா மத போதகர்.!! : உலகளவில் வைரலாகும் காணொளி இதோ..

இறந்த மனிதரை உயிர்ப்பித்தாரா மத போதகர்.!! : உலகளவில் வைரலாகும் காணொளி இதோ..


இறந்த மனிதரை உயிர்ப்பித்தாரா மத போதகர்.!! : உலகளவில் வைரலாகும் காணொளி இதோ..

சவப்பெட்டியில் இறந்த உடலை பார்த்து எழுந்திரு, எழுந்திரு! என்று மத போதகர் ஒருவர் உரக்க கத்துவது போன்ற காணொளி ஒன்று உலகம் முழுவதும் வைரலாக பகிரப்பட்டுள்ளது.





அந்த வீடியோவில் இறந்த மனிதர் மெதுவாக நேராக எழுந்து உட்காருகிறார். அங்கு கூடியிருப்போர் அனைவரும் மிக ஆச்சர்யமடைகின்றனர் மேலும் அவரை பார்த்து ஆரவாரம் செய்கின்றனர்.ஆனால்,இதனை இந்த நவீன கால மக்கள் யாரும் நம்பத் தயாராக இல்லை.





இந்த நிகழ்வில் தன்னை தானே மத போதகர் என்று அறிவித்து கொண்டுள்ள இந்த நிகழ்வில் பங்கெடுத்ததன் மூலம், மத போதகர் இவர்களை அனைவரையும் அவரது ஆதாயத்திற்காக பயன்படுத்தி கொண்டதாக கூறி, இறுதிச்சடங்கு நடத்திய தலைவர் குழுவால் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தென்னாபிரிக்காவில் உள்ள ஜோகனஸ்பர்கில் மத போதகரின் தேவாலயத்திற்கு அருகிலுள்ள வெளிப்புற இடம் ஒன்றில் நிகழ்ந்ததாக கூறப்படும் இறந்தவரை உயிர்பித்தல் நிகழ்வு, இணையதளத்தில் கேலி செய்யப்படுவதோடு,உலக மக்கள் அனைவரிடமும் கண்டனத்திற்கும் உள்ளாகியுள்ளது.

இந்த சம்பவம் அற்புதங்கள் ஒன்றும் இல்லை என தென்னாப்பிரிக்க கலாசார, மத மற்றும் மொழி உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் நம்பிக்கை இழந்த நம் மக்களிடம் பணம் பறிக்கும் முனைப்போடு செய்யும் முயற்சிகள் இவை, என்று ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும் இதில் கலந்து கொள்வோரும் தாங்கள் நன்றாக ஏமாற்றப்படுவதாக கூறி அதிருப்தியும் தெரிவித்துள்ளனர்.





தற்போது இந்த பிரச்சனையை நகைச்சுவையாக்கி தென்னாப்பிரிக்க மக்கள் பலறும் R+ResurrectionChallenge என்ற ஹேஸ்டேக்கை பயன்படுத்தி சமூக ஊடகங்களில் கேலியாகப் பதிவிட ஆரம்பித்துள்ளனர்.காணொளி இதோ..


நண்பர்களுடன் பகிர :