உயிர் பெற்ற நந்தி: கால் மாற்றி அமர்ந்த அதிசயம் திருவண்ணாமலையில் நடந்த ஆச்சர்ய சம்பவம் இது! Description: உயிர் பெற்ற நந்தி: கால் மாற்றி அமர்ந்த அதிசயம் திருவண்ணாமலையில் நடந்த ஆச்சர்ய சம்பவம் இது!

உயிர் பெற்ற நந்தி: கால் மாற்றி அமர்ந்த அதிசயம் திருவண்ணாமலையில் நடந்த ஆச்சர்ய சம்பவம் இது!


உயிர் பெற்ற நந்தி: கால் மாற்றி அமர்ந்த அதிசயம் திருவண்ணாமலையில் நடந்த ஆச்சர்ய சம்பவம் இது!

சிவன் கோயில்களில் நந்திக்கு முக்கிய இடம் உண்டு. ஈஸ்வரனை பார்த்தபடி நந்தி இருக்கும். அதன் காதில் நம் வேண்டுதல்களை சொன்னால் நிறைவேறும் என்றும் ஐதீகம் உண்டு. பொதுவாகவே சிவன் கோயில்களில் நந்தி இடதுகாலை மடக்கி, வலதுகாலை முன்வைத்துத் தான் இருக்கும். ஆனால் திருவண்ணாமலையில் மட்டும் வலதுகாலை மடக்கி, இடதுகாலை முன்வைத்து இருக்கும் நந்தி.

ஏன் இங்கு மட்டும் இந்த மாற்றம் என்பதன் பிண்ணனியில் மிகப்பெரிய வரலாற்றுத் தகவல் ஒன்று உள்ளது. அதுகுறித்து தெரிந்துகொள்ள மேலே படியுங்கள். ஒருமுறை திருவண்ணாமலை கோயிலை ஒரு முகலாய மன்னர் கைப்பற்றினாராம். அவர் கோயிலில் நின்று கொண்டு இருந்தபோது அஞ்சு சிவபக்தர்கள் சேர்ந்து ஒரு காளையை தூக்கிக் கொண்டு சென்றனர். உடனே அங்கு நின்ற மன்னன், இதை ஏன் இப்படி தூக்கிச் செல்கிறீர்கள் என கேட்டாராம்.

அதற்கு அந்த சிவ பக்தர்கள், இது நாங்கள் வழிபடும் ஈசனை சுமக்கும் வாகனம். ஈசனையே சுமக்கும் இந்த மாட்டை நாங்கள் சுமப்பது எங்களுக்கு கிடைத்த பாக்கியம் என்று சொல்ல, அந்த முகலாய மன்னனுக்கோ சுருக்கென்று இருந்தது. அப்படியா? ‘’நான் இந்த காளை மாட்டை இரண்டு துண்டா வெட்டிவிடுகிறேன். உங்கள் ஈசன் வந்து காக்கிராறா பார்ப்போம் என சொல்லிக் கொண்டேவெட்டினான். அதிர்ச்சியடைந்த சிவபக்தர்கள் சிவபெருமானிடம் கண்ணீர் மல்க முறையிட்டனர்.

அப்போது ஒரு அசிரீரி கேட்டது. அண்ணாமலையாரின் குரல் அது. ‘’வடக்குதிசை நோக்கி பயணப்படுங்கள். என் பக்தன் ஒருவன் இடைவிடாது ஓம் நமசிவாய என உச்சரித்துக் கொண்டிருப்பான். அவனை இங்கே அழைத்து வாருங்கள்” என்று அந்த குரல் வழிகாட்டியது. அவர்களும் சென்றனர். அங்கு ஒரு சிறுவன் அமர்ந்து ஓம் நமசிவாய என்னும் மந்திரத்தை சொல்லிக் கொண்டு இருந்தான். இந்த பொடியனா அந்த காளைக்கு உயிர் கொடுக்கப் போகிறான் என அவர்களுக்கு நம்பிக்கை குறைவு ஏற்பட்டது.

அப்போது அவர்களை நோக்கி புலி ஒன்று வர, ஓம் நமச்சிவாய என்னும் மந்திரத்தைச் சொல்லி சிறுவன் புலியையே திருப்பி அனுப்பினான். அதன் பின்னர் தான் நம்பிக்கை துளிர்த்தது. சிறுவனிடம் விசயத்தைச் சொல்ல, அவன் இவர்களுடன் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு சென்றான். அங்கு இரு துண்டுகளாக வெட்டப்பட்ட மாட்டைப் பார்த்து அவன் கண்ணீர் சிந்தினான்.

அவன் இடைவிடாது நமச்சிவாய மந்திரத்தைச் சொல்லச், சொல்ல வெட்டப்பட்டு கிடந்த மாடு ஒன்றாக சேர்ந்தது. உயிரும் பெற்றது. முகலாய மன்னனுக்கு இன்னும் கோபம் ஏற்பட்டது. இந்த பொடியன் ஏதோ சித்து விளையாட்டு காட்டுகிறான். இன்னொரு போட்டி வைக்கிறேன். அதில் ஜெயித்தால் என் சொத்துக்களை இந்த கோயிலுக்கு கொடுக்கிறேன். அதில் தோற்றால் கோயிலை இடித்து விடுவேன் என கொக்கரித்தார். ஆனால் சிறுவனோ கூலாக அதற்கு சம்மதித்தான்.

உடனே ஒரு தட்டு நிறைய மாமிசத்த்சி கொண்டு வந்து அதை அண்ணாமலையாருக்கு படைக்க உத்தரவிட்டான். உண்மையில் அவருக்கு சக்தி இருப்பின் அது பூக்களாக மாறட்டும் என்றான். அப்போதும் சிறுவன் நமச்சிவாய மந்திரத்தைச் சொல்ல அது பூக்களாக மாறியது. தொடர்ந்து ராஜகோபுரம் அருகே வந்த முகலாய மன்னர் இந்த நந்திக்கு உன்னால் உயிர் கொடுக்க இயலுமா? அதன் கால்களை மாற்றி அமர வைக்க முடியுமா? எனக் கேட்க, பொடியன் நமச்சிவாய மந்திரத்தை சொல்லத் துவங்கினான். நந்தி உயிர்பெற்று எழுந்து, கால் மாற்றி அமர்ந்தது.

முகலாய மன்னனோ தன் தோல்வியை ஒப்புக்கொண்டு சொன்னது போலவே பொன், பொருள் யாவும் கொடுத்தார். அற்புதங்கள் நிகழ்த்திய அந்த பொடியன் தான், பின்னாளில் வீரேகிய முனிவராக மாறினார். திருவண்ணாமலை மாவட்டம் சீனந்தல் அவரது பூர்வீகம். இப்போதும் அவரது நினைவாக அங்கு மடம் உள்ளது.


நண்பர்களுடன் பகிர :