பாகிஸ்தானை மிரட்டிய மிராஜ் 2000 வரலாறு தெரியுமா? உலகநாடுகளையே திரும்பி பார்க்க வைத்த மிராஜ்..! Description: பாகிஸ்தானை மிரட்டிய மிராஜ் 2000 வரலாறு தெரியுமா? உலகநாடுகளையே திரும்பி பார்க்க வைத்த மிராஜ்..!

பாகிஸ்தானை மிரட்டிய மிராஜ் 2000 வரலாறு தெரியுமா? உலகநாடுகளையே திரும்பி பார்க்க வைத்த மிராஜ்..!


 பாகிஸ்தானை மிரட்டிய மிராஜ் 2000 வரலாறு தெரியுமா?     உலகநாடுகளையே திரும்பி பார்க்க வைத்த மிராஜ்..!

பாகிஸ்தானில் தீவிரவாதிகள் முகாமை இலக்குத் தவறாமல் தாக்கிய மிராஜ் 2000 போர் விமானம் இப்போது உலக நாடுகளின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இது பிரான்ஸ் நாட்டில் டசால்ட் நிறுவனத்தின் தயாரிப்பு ஆகும். கடந்த 2007ம் ஆண்டோடு இந்நிறுவனம் போர் விமானங்கள் தயாரிப்பதை நிறுத்திவிட்டது.இந்த மிராஜ் 2000 ரக விமானமானது இந்தியா மட்டும் அல்லது பிரான்ஸ் அமீரகம், தைவான் ஆகிய நாடுகளிலும் உள்ளது.

அதிகபட்சமாக மணிக்கு 2,335 கிலோ மீட்டர் வரை பாய்ந்து தாக்கக் கூடிய இந்த மிராஜ் 2000 தான் இப்போது இந்தியாவின் ஹீரோ ஆகியுள்ளது.

மேலும் இது 17,660 மீட்டர் உயரம் வரை பறக்கக் கூடியது. முதன் முதலில் பிரான்ஸ் நாட்டின் விமானப்படைக்காக 1970ல் மிராஜ் 2000 ரக போர் விமானங்கள் தயாரிக்கப்பட்டது.

1983ல் இது இந்திய விமானப் படையில் சேர்க்கப்பட்டது. அதனைத் தரம் உயர்த்த மீண்டும் பிரான்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் பின்னர் தான் இப்போது நம் இந்திய விமானப்படையில் பயன்பாட்டில் இருக்கும் இந்த இலகு ரக மிராஜ் 2000 ஆக தரம் உயர்ந்தது.

இப்போது அதன் இமேஜ் இந்தியர்களின் மத்தியில் ஹீரோவாகவும் உயர்ந்துள்ளது.


நண்பர்களுடன் பகிர :